மஹா சங்கடஹர சதுர்த்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றிய பதிவுகள் :

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் ‘விக்னங்களை தீர்க்கும் விநாயகர்’, என்று கூட சொல்லலாம். 

வெறும் கைகளோடு, இரு கை கூப்பி கும்பிட்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு, 3 பிள்ளையார் கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே, வரங்களை வாரி வழங்குபவர், தும்பிக்கை விநாயகர். 

சாஸ்திர முறைப்படி, சதுர்த்தி வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மேலும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதம் 25-8-2021 புதன்கிழமை, மகா சங்கட சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் வழிபாடு செய்ய வேண்டுமென்றால், எப்போதும் போலவே முந்தையநாள் வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல், கிடைத்தால் அதை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம்.

முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாது என்றால் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

சதுர்த்தி தினத்தன்று மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்யலாம், சுண்டல் செய்யலாம். சில பேர் விநாயகருக்கு பிள்ளையார் உருண்டை என்று படைப்பார்கள். நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதாவது பச்சரிசியை தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீர் ஊற்றி மாவாக அரைத்துக் கொள்வார்கள். இட்லி மாவு ஆட்டுவது போல கொஞ்சம் நறநறப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவோடு, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி, கொழுக்கட்டை பிடிப்பது போலவே, பிள்ளையார் உருண்டை பிடித்து வைத்து வழிபாடு செய்வார்கள்.

பிரசாதம் செய்து வழிபடுவதில் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது மனதில் இருந்தால், அதை விநாயகரிடம் சொல்லுங்கள்! அப்படி சொல்லும்போது, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த வேண்டுதல் அடுத்த மஹா சங்கட சதுர்த்திக்குள், நிறைவேற வேண்டுமென்றும், வேண்டுதல் வையுங்கள்.

அதற்காக இந்த சங்கடஹர சதுர்த்திக்கு பிள்ளையார் உருண்டையை 11, 21, 51, 101 இப்படி கணக்கு என்பது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் அது ஒற்றைப்படையில் வரவேண்டும். இவ்வாறாக பிள்ளையார் உருண்டைகளையோ அல்லது கொழுக்கட்டைகளாயோ பிடித்து விநாயகருக்கு முன்பு நைவேத்தியமாக படைத்து விடுங்கள். (அந்த மாவில், உருண்டைகளை பிடிக்கும் போதே உங்களது வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களது பூஜை முடிந்தவுடன் அந்த உருண்டைகளை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும். அவ்வளவு தான். விநாயகரிடம் மனதார அந்த உருண்டைகளை நெய்வேதிமாக படைக்கும் போது, என்னுடைய வேண்டுதல்கள் அடுத்த வருடத்திற்குள் நிறைவேற்றி விட்டால், அடுத்த மகா சங்கட சதுர்திக்கும் இதேபோல் நெய்வேதியத்தை வைத்து விரதமிருந்து பூஜை செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் அது கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

நீங்கள் எந்த வேண்டுதலை வைத்தீர்களோ, அந்த வேண்டுதலுக்கு, அடுத்த 11வது நாள் நிச்சயம் ஒரு வழி கிடைத்திருக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும்.

குறிப்பாக, புத்திக்கூர்மை இல்லாதவர்கள் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால், அவர்கள் தெளிவான புத்தியை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கையோடு இந்த மகா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வாருங்கள் பதினோராவது நாள் கட்டாயம் அதற்கான பலன் உங்கள் கைகளுக்கு வந்தே தீரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top