காயத்ரி மந்திரம் உருவான புராண வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காயத்ரி மந்திரம் உருவான புராண வரலாறு பற்றிய பதிவுகள் :

முன்பு ஒருமுறை சத்ரியரான கெளசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கெளசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.

தோல்வியுற்ற கௌசிக மன்னனிடம் வசிஷ்டர் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, மந்திரி என்ற பசுக்கள் கட்டுப்படும் எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்கிறார். 

மேலும் தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். இதை கண்ட அன்னை சக்தி கௌசிகன் முன் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று அறிவித்து மறைகிறாள்.
 
சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாள் (அன்று பௌர்ணமி) அன்று அவளது ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார் ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. 

உடனே அந்த விளக்கில் தன் தலை, இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார். 
 
காயத்ரி: 

தனது உடலை திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாண்டம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாண்டம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் கௌசிகன் கூறிய இம்மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இனி வேதியர்கள் ஜோதி சொரூபமாக என்னை நினைத்து உலக நன்மைக்கு பிராத்தனை செய்யலாம் என அருளியதால் அன்று முதல் இன்று வரை நாம் உச்சாண்டம் செய்து பலன் பெறுகிறோம்.

காயத்ரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என்று அழைக்கிறோம். 

சிரவண மாத பௌர்ணமிக்கு மறுநாள் அவர் வரமும் பட்டமும் பெற்றதால் நாமும் அதே நாளில் கதாத்ரி மந்திரத்தை உச்சாண்டம் செய்து வணங்குகிறோம். அந்நாளில் இம்மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க பூர்வஜென்ம பாவங்கள் தொலைந்து போகும்.

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். 

மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம். 

இதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top