நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பொங்கல் பண்டிகையில் மஞ்சள் கொத்தும், கரும்பும் அவசியமாக வைப்பதற்கு காரணம் குறித்து சிறு பதிவுகள் :

எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதை விமர்சையாக கொண்டாடுவது தான் நம் பண்பாடு. அதிலும் பொங்கல் என்று வந்துவிட்டால் போதும். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் இது. இந்த பண்டிகையானது இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

இயற்கை தன் வளங்களை ஜாதி மத பேதம் பார்க்காமல் தான் அள்ளித் தருகிறது. பொங்கல் பண்டிகைக்கு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு எந்த ஒரு வரலாறும் இல்லை. ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிகாலத்தில் மனிதன் பழங்களையும், காய்களையும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான். படிப்படியாக நெருப்பினை கண்டுபிடித்து, விவசாயத்தையும் கண்டுபிடித்து நாகரிக வளர்ச்சியை அறிந்து, முன்னேற்றமடைந்தால் தான் மனிதன், மிருகங்களில் இருந்து வேறுபட்டு காண்கின்றான். மனிதனின் பல்வேறு விதமான வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருப்பது இந்த இயற்கை தான். 

இயற்கை என்று சொல்லும்போது நம் பூமியில் மனித உயிரினங்களும், பலவகையான புழு பூச்சிகளும் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது சூரிய பகவான். நம் பூமியானது இருளில் இருந்து விலகி வெளிச்சத்தை அடைகிறது என்றால் இதற்குக் காரணமும் சூரிய பகவான்தான். நம்மை வாழவைக்கும் அந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை அல்லவா?. இதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த தை திருநாள். 

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த பொங்கல் திருநாளை நம் முன்னோர்கள் எப்படி கொண்டாடினார்கல் என்பதைப் பற்றியும், சூரியனை வழிபடும் போது சர்க்கரை பொங்கல், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு இவைகளை எதற்காக படைத்தார்கள் என்பதற்கான காரணத்தையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.   

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் சக்கரை பொங்கல், மஞ்சள், கரும்பு, இஞ்சி இவைகளுடன் சேர்ந்து 21 வகையான காய்கறிகளை சமைத்து சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டு வந்தார்கள். ஏனென்றால் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் இந்த காய்கறிகளிலும் ஒன்று. ஆனால் நம்மால் 21 வகையான காய்கறிகளை சமைத்து வைத்து, இந்த காலத்தில் பொங்கலை கொண்டாடுவது என்பது முடியுமா, அது கேள்விக்குறியான ஒன்றுதான். இயற்கையாக விளையட்டும் எவ்வளவு பொருட்கள் இருந்தாலும், இதை(மண்பானை சக்கரை பொங்கல், மஞ்சள், இஞ்சி, கரும்பு) மட்டும் கட்டாயம் வைக்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கும் சில காரணங்கள் இருக்கிறது.  

இயற்கையாக மண்ணினால் உருவாக்கப்பட்ட மண்பானையில் சமைப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. தை மாதத்தில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட பச்சரிசியை அந்த சூரிய பகவானுக்கு படைப்பதற்காக பொங்கல் வைத்தார்கள். நம் வாழ்க்கையானது இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த அரிசியுடன் வெல்லத்தையும் சேர்த்தார்கள். 

அரிசியைப் போலவே புதியதாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளையும் சமைத்து சூரியனுக்கு படைத்தார்கள். இப்படி இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களில் விஷத்தன்மை ஏதாவது இருந்தால் அது மஞ்சள் கொத்தில் இருந்து வீசப்படும் வாசத்திலிருந்து நீங்கும். இஞ்சிக்கும் விஷத் தன்மையை நீக்கும் தன்மை உடையது. இது மருத்துவம் சார்ந்த உண்மையும் கூட. அதாவதுபொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் கொத்து கட்டி பொங்கல் வைப்பார்கள். 

பொங்கல் பானையானது சூடேறும் போது மஞ்சள் மனமும் சேர்ந்து சமையலுடன் கலந்திருக்கும். இதன்மூலம் சமைக்கும் பொருளில் விஷத்தன்மை நீங்கும் என்பதற்காக மஞ்சள் கொத்தை பொங்கல் பானையில் கட்டும் பாரம்பரியத்தை நம் 

முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். பொங்கல் என்று வந்தாலே கரும்பிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. கரும்பில் இருந்து தான் சர்க்கரையும், வெல்லமும் எடுக்கப்படுகிறது என்பதும், கரும்பும் தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும். பொங்கல் அன்று அந்த சூரிய பகவானுக்கு கரும்பை படைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கரடுமுரடான தோல் கொண்ட கரும்பின் உள்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். நம் வாழ்க்கையும் இது போல் தான். 

பல கஷ்டங்களை கடந்து செல்லும்போது தான் நம் வாழ்க்கையும் இனிமையானதாக மாறுகிறது என்பதை இதன்மூலம் உணர வேண்டும் என்பதற்காக கரும்பை படைத்தார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். இப்படியாக நம் முன்னோர்கள் அந்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக சக்கரை பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து காய்கறிகள் இவைகளை படைத்து நன்றி சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இது காலப்போக்கில் நாகரீக மாற்றத்தின் மூலம் சற்று மாறிவிட்டது. 

இன்றைக்கு நம் வீடுகளில், நம் வீட்டுப் பூஜை அறையில் அந்த சூரிய பகவானை நினைத்து சர்க்கரை பொங்கலும், கரும்பும், மஞ்சள் கொத்தும் வைத்து படைத்து வருகின்றோம். ஆனால் அந்த சூரியபகவானுக்கு நைய்வேத்தியத்தை வெளியில் வைத்து படைப்பதற்கான வசதி உடையவர்கள், முடிந்தால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூட பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடலாம். 

இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

Post a Comment

Previous Post Next Post