நேச நாயனார்

0

நேச நாயனார்

காம்பீலி என்னும் பழம்பெரும் பதியில், காளர் மரபில் நேச நாயனார் என்பவர் அவதரித்தார். நேச நாயனார் ஈசரிடத்தும் அவர்தம் நேசரிடத்தும் அளவிலாப் பாசமுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர்த் தாளினை நினைக்க - வாக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்ல - காயம் திருசடைபிரானுக்குத் திருப்பணிகள் பல செய்தன. நேச நாயனார் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளும் கீளும் கோவணமும் நெய்து வழங்கும் பணியைத் தட்டாது செய்து வந்தார். நேச நாயனார் சிவனடியார்களுக்காகவே வாழ்ந்தார். உயர்ந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்று பரமனின் மென்மலர்த்தாள் நீழலை அடைந்தார்.

குருபூஜை


நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top