about

ஓம் நமசிவாய என்ற சிவ நாமத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது மக்களிடையே உயர்ந்த ஆன்மீக கருத்துக்களை பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இது இந்திய அரசால் அனுமதி பெறப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.


தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் சிலர் போலியான அல்லது முறையான புரிதல் இல்லாமல் தங்கள் கருத்துக்களை ஆன்மீக தகவல்கள் என்ற பெயரில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையை முழுவதும் மாற்றி மக்களுக்கு தேவையான அடிப்படை ஆன்மீகத்திலிருந்து உயர்தர ஆன்மிகம் வரை அதன் பின்னணி, வரலாறு மற்றும் அறிவியல் உண்மைகளை புரிய வைப்பதற்காக ஓம் நமசிவாய என்ற சிவ நாமத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.


2018 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது தற்போது வரை மக்களுக்கு தேவையான அடிப்படை பஞ்சாங்கத்திலிருந்து பல்வேறு ஆன்மீக தகவல்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறது.


சிவ நாமத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது சிதலமடைந்த ஆலய கட்டுமானம், தினசரி ஆலயத்திற்கான பூஜைப்பொருள்கள் வழங்குதல் மற்றும் விசேஷ நாள்களுக்கான சிறப்பு பூஜை உதவிகள் வழங்குதல் போன்ற ஆலய உதவிகள் மட்டுமல்லாமல் ஏழ்மை மக்களுக்கு அன்றாட உணவு வழங்குதல், மருத்துவம், கல்வி உதவித்தொகை போன்ற அடிப்படை உதவிகளும் வழங்கி வருகிறது.


தமிழகம் முழுவதும் செயல்படும் இந்த அமைப்பின் தலைமையிடம் முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடியில் (கன்னியாகுமாரி) அமைந்துள்ளது.


omnamasivaya.co.in என்ற இந்த இணையத்தளமானது ஆன்மீக தகவல்கள், புராண இதிகாச இலக்கிய நூல்கள், கடவுள் மந்திரங்கள், ஆலய வரலாறுகள், கடவுள் திருஅவதாரங்கள் மற்றும் நீதிக்கதைகள் போன்ற பல தகவல்களை கொண்ட கட்டற்ற ஆன்மீக களஞ்சியமாக செயல்படும்.


தற்போதைய 2022 மே நிலவர படி இந்த இணையத்தளமானது 50491 + பக்கங்களையும், 124 + PDF ஆவணங்களையும், 27650 + வாசகர்களையும் கொண்டுள்ளது. தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பக்கங்களை கொண்டுள்ளது.


24 மணிநேர சைவ இணையவழி வானொலி சேவையானது 2020 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது 2022 மே நிலவர படி உலகம் முழுவதிலும் சுமார் 27000 + வாசகர்களை கொண்டு வெற்றிகாரமாக செயல்பட்டு வருகிறது.

x

To Top