சிவபுராணம் பாடல் 6புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

 

பொருள்:


புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,

பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,

கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,

வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்

இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று

எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

குறிப்பு:


1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

Previous Post Next Post