விபூதி அணியும் முறையும் அவற்றின் பெயரையும் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு பதிப்பு :
உள் தூளனம்


விபூதியை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை "உள் தூளனம்" ஆகும்.

திரிபுண்டரீகம்


ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரல்களால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்" ஆகும்.

திருநீற்றை மோதிர விரலால் எடுப்பதுதான் சிறந்தது.

நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அது தான் கூறப்படுகிறது.

வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, அண்ணாந்து நெற்றியில் பூச வேண்டும்.

"திருச்சிற்றம்பலம்"அல்லது "சிவாயநம" அல்லது "சிவ சிவ" என்று சொல்லி திருநீற்றினை அணிந்து கொள்ள வேண்டும்.

மேலும் உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும் என்பதை நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிப்பில் பதிவிடுகிறோம்.

காலை, மாலை மற்றும் இரவு படுக்கப் போகும் போதும், வெளியே கிளம்பும் போதும், திருநீறு தரிக்க வேண்டும்.

நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது.

சுவாமி முன்பும், குரு முன்பும், சிவனடியார் முன்பும், முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய வேண்டும்.


ஓம் நமசிவாய
Tags :

veputhi , thirinooru , thirineeru , pothu , ul thulanam , thiripundareegam , vebuthi anniyum murai

Post a Comment

Previous Post Next Post