தில்லைக்காளி

0

தில்லைக்காளி என்பவள் யார் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவு :




அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம்

சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது.

பார்வதிதேவி,"சக்தி தான் பெரிது' என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார்.

மனம்  வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன்,""அரக்கர்களால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது.

நீ காளியாக இருந்து அவர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில்(சிதம்பரம்) என்னை நோக்கி தவம் இரு. நான் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன்.

அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்,''என்றார். அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, "தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள்.

இவளை "எல்லைக்காளி' என்றும் சொல்வர். சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்.

ஓம் நமசிவாய

-----------------------------------------------------------------------------------------------------------------------

ThillaiKaali  kurithu namathu Om Namsivaya kuluvin moolam seru pathivukal :

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top