சூரிய பகவான் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு குறிப்புகள் :
சூரியன் என்பவர் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.
இவர் தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப்ப முனிவருக்கும் மகனாக பிறந்தார்.
சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.
சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.
சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் நமசிவாய
Tags :
Suriyan , suriya bagavan , sun , saaya , navagragam