சிவபெருமானை இந்த இடத்தில் தொட்டு வழிபடுவது அவரின் சாபத்தை பெற்றுத்தரும்

0
சாஸ்திரங்களின் படி சிவபெருமானை இந்த இடத்தில் தொட்டு வழிபடுவது அவரின் சாபத்தை பெற்றுத்தரும்...!

இந்து மதத்தின் படி சிவபெருமான் முமூர்த்திகளில் ஒருவராவார். இவர்தான் கடவுள்களுக்கு தலைமையனானவர் என்று புராணங்கள் கூறுகிறது. சிவபெருமானுக்கு பல பெயர்கள் உள்ளது. சிவபெருமான்தான் மரணத்தின் கடவுளாகவும், பிரபஞ்சத்தின் கண்காணிப்பாளராகவும், மோட்சத்தை வழங்குபவராகவும் இருக்கிறார்.

சிவபெருமானின் வழிபாடு என்பது எச்சரிக்கையாக செய்ய வேண்டியதாகும். பொதுவாக பூஜை முடிந்த பிறகு சிவபெருமானை சுற்றி வருவது வழக்கமாகும். ஆனால் சிவலிங்கத்தை இடைவெளி விட்டுத்தான் சுற்றிவர வேண்டும் என்று நமது புராணங்கள் கூறுகிறது.
  
சிவலிங்க பரிக்ரமம்

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் சிவபெருமானை முழுவதுமாக சுற்றி வருவதைத்தான் வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் புராண காலங்களில் சிவபெருமானை தூரத்தில் இருந்துதான் சுற்றிவந்தார்கள்.
  
சிவபுராணம்

சிவபுராணத்தின் படியும் சாஸ்திரங்களின் படியும் சிவ பக்தர்கள் சிவலிங்கத்தை தூரமாக இருந்துதான் சுற்ற வேண்டும். இதற்கு காரணம் சிவபெருமான்தான் பிரபஞ்சத்தின் ஆதியாகவும், அந்தமாகவும் இருக்கிறார்.

சிவலிங்கத்தின் அமைப்பு!

சிவபெருமானிடம் இருந்து வெளிப்படும் ஆற்றலும்,சக்தியும் அளவற்றதாகும். இது நிர்மிலி வடிவத்தில் குறிப்பிடப்படுகிறது. நிர்மிலி என்பது தற்போதைய சிவலிங்கங்களில் இருக்கும் பால் மற்றும் தண்ணீர் இருக்கும் இடமாகும்.

சிவனின் சக்தி

சிவபெருமானின் சக்தி என்பது அளவிட முடியாதது. அதில் யாரும் தலையிடக்கூடாது. நிர்மிலி என்பது மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. யாரும் இந்த இடத்தை கால் வைக்கக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது.

சிவனின் சாபம்

சிவபுராணத்தின் படி ஒருமுறை தீவிர சிவ பக்தரான கந்தர்வர்களின் அரசன் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். சிவலிங்கத்தை சுற்றி வரும்போது நிர்மிலியில் கால் வைத்துவிட்டார். இதனால் சிவனின் சாபத்திற்கு ஆளாகி அவரின் திவ்யதுவத்தையும், அற்புத சக்திகளையும் இழந்தார்.


நிர்மிலியின் அர்த்தம்

புனித நூல்களில் கூறியுள்ள படி சிவலிங்கத்தை அனுமதிப்பது என்பது மிகப்பெரிய பாவச்செயலாகும். சிவபெருமானின் நிர்மிலியை தொடுவதோ அல்லது அதன் எல்லைக்குள் கால் வைப்பதோ சிவபெருமானை அவமதிக்கும் செயலாகும். இதனால் சிவபெருமானின் சாபத்திற்கு நீங்கள் ஆளாகலாம்.

காரணம்

இவ்வாறு கூறப்பட காரணம் புராண காலங்களில் சிவலிங்கத்தின் நிர்மிலி பகுதி கண்களுக்கு தெரியாத வண்ணம் பூமிக்குள் இருக்கும். இதனால் தூரத்தில் இருந்தே சிவனை வழிபடுவது நல்லது. ஆனால் இப்பொழுது சிவலிங்கத்தின் அமைப்பே மாறிவிட்டது.

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top