பைரவர் காயத்ரி மந்திரகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பைரவர் காயத்ரி மந்திரகள் :


* ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

* ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

* ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

அறுபத்து நான்கு பைரவர்கள் தொகு
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

1.நீலகண்ட பைரவர்
2.விசாலாக்ஷ பைரவர்
3.மார்த்தாண்ட பைரவர்
4.முண்டனப்பிரபு பைரவர்
5.ஸ்வஸ்சந்த பைரவர்
6.அதிசந்துஷ்ட பைரவர்
7.கேர பைரவர்
8.ஸம்ஹார பைரவர்
9.விஸ்வரூப பைரவர்
10.நானாரூப பைரவர்
11.பரம பைரவர்
12.தண்டகர்ண பைரவர்
13.ஸ்தாபாத்ர பைரவர்
14.சீரீட பைரவர்
15.உன்மத்த பைரவர்
16.மேகநாத பைரவர்
17.மனோவேக பைரவர்
18.க்ஷத்ர பாலக பைரவர்
19.விருபாக்ஷ பைரவர்
20.கராள பைரவர்
21.நிர்பய பைரவர்
22.ஆகர்ஷண பைரவர்
23.ப்ரேக்ஷத பைரவர்
24.லோகபால பைரவர்
25.கதாதர பைரவர்
26.வஞ்ரஹஸ்த பைரவர்
27.மகாகால பைரவர்
28.பிரகண்ட பைரவர்
29.ப்ரளய பைரவர்
30.அந்தக பைரவர்
31.பூமிகர்ப்ப பைரவர்
32.பீஷ்ண பைரவர்
33.ஸம்ஹார பைரவர்
34.குலபால பைரவர்
35.ருண்டமாலா பைரவர்
36.ரத்தாங்க பைரவர்
37.பிங்களேஷ்ண பைரவர்
38.அப்ரரூப பைரவர்
39.தாரபாலன பைரவர்
40.ப்ரஜா பாலன பைரவர்
41.குல பைரவர்
42.மந்திர நாயக பைரவர்
43.ருத்ர பைரவர்
44.பிதாமஹ பைரவர்
45.விஷ்ணு பைரவர்
46.வடுகநாத பைரவர்
47.கபால பைரவர்
48.பூதவேதாள பைரவர்
49.த்ரிநேத்ர பைரவர்
50.திரிபுராந்தக பைரவர்
51.வரத பைரவர்
52.பர்வத வாகன பைரவர்
53.சசிவாகன பைரவர்
54.கபால பூஷண பைரவர்
55.ஸர்வவேத பைரவர்
56.ஈசான பைரவர்
57.ஸர்வபூத பைரவர்
58.ஸர்வபூத பைரவர்
59.கோரநாத பைரவர்
60.பயங்க பைரவர்
61.புத்திமுக்தி பயப்த பைரவர்
62.காலாக்னி பைரவர்
63.மகாரௌத்ர பைரவர்
64.தக்ஷிணா பிஸ்திதி பைரவர்


ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top