சிவனுக்குகந்த பத்திரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனுக்குகந்த பத்திரங்கள் பற்றிய பதிவுகள் :1. வில்வம்
2. நொச்சி
3. முட்கிளுவை
4. விளா
5. மாவிலங்கை
(6) மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.

பஞ்ச வில்வம் என்பவை

வில்வமும், கிளுவைதானும், விளாவும்வெண் ணொச்சிதானும் நல்லமா விலிங்கை தானும் ஞாயிற்றுப் பருவம் தன்னில் முல்லைமால் விடையான் பாத முளரியில் கூடச் சாத்தின் சொல்லொணா ஞானம் மேவும்; சொலும் இவை பஞ்ச வில்வம்.

உரை :

 "வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலிங்கை" என்னும் இவை பஞ்ச வில்வமாகும். இவைகளை ஞாயிற்றுக்கிழமையில் வரும் பௌர்ணமியில் சிவபெருமானுடைய திருவடிகளில் பொருந்தச் சாத்தினால், சொல்லுதற்கரிய மெய்ஞ்ஞானம் உண்டாகும்.

வில்வம் எடுக்கலாகாத நாட்கள்

பன்னுமா தப்பி றப்புப் பகர்சோம வாரந் தானும் 
மன்னும்மூ வைந்தும் நான்கும் வருபதி னான்கும் எட்டும் 
பின்னும் ஒன் பதுவு மான திதிகளும் பெருமை வில்வந் 
தன்னைவந் தெடுக்க லாகா தெடுத்திடில் நரகம் சார்வார்.

உரை :

மாத பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அட்டமி, நவமி ஆகிய திதிகள் இந்நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து எடுத்தல் கூடாது. எடுத்தால் நரகத்தை அடைவார்கள்.

இந்த தகவல் கமலை ஞானப்பிரகாசர் அருளிய புட்பவிதி என்ற நூலிலிருந்து ஓம் நமசிவாய ஆன்மீக குழு வாயிலாக பகிரப்பட்டது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top