மார்கழி மாத சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத சிறப்பு பதிவுகள் :


மார்கழி நோன்பு:

மார்கழி மாதம் நோன்பு நோற்றால் மக்கள் நலனுற மழை பெய்யும் சொர்க்கம் புகலாம் என்றும் திருப்பாவை பாசுரம் மூலம் கூறுகிறார் ஆண்டாள் நாச்சியார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பாவை 30 பாசுரங்களையும் மார்கழி மாதம் பாடினால் அந்த இறைவனின் திருவடி தரிசனம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவாக பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும். திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.

மார்கழியில் செய்ய வேண்டியவை:

1). மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இதனால் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது அல்லது கேட்பது, பஜனை பாடுதல் புண்ணியமாகும். 

2). மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.

3). புதிய சொத்துக்கள் வாங்குதல் அதாவது நிலம், வீடு, மனை வாங்க முன் பணம் கொடுப்பதும் நல்ல விஷயம்.

4). அதிகாலை எழுந்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

மார்கழியில் செய்யக்கூடாதவை :

1). மார்கழி மாதத்தில் விதை விதைத்தலும், திருமணம் செய்தலும் கூடாது.

2). மார்கழி மாதம் விதை வளர்வதற்கான காலம். இந்த காலத்தில் விதை விதைத்தால் அது சரியாக வளர்வதற்கான சூழல் இருக்காது. இதனால் தான் திருமணமும் செய்யக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

3). இந்தமாதத்தில் அதிகாலையில் ஆக்சிஜன் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்குப் பின் உறங்கக் கூடாது என முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top