நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆன்மீக அருள் கிடைப்பதற்கான சில எளிய பரிகாரங்கள் :
ஆலயங்களை சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.
துளசி செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவங்கள் விலகும்.
மலர் செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.
உழவார பணிகளை மேற்கொண்டால் பிறவி பயனை அடைய இயலும்.
தொழு நோயாளிக்கு வயிராற விருந்து அளித்தால் கர்ம வினைகள் நீங்கும்.
பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிடைக்கும்.
கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.
சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷம் நெருங்காது.
தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கிடைக்கும்.
காக்கைக்கு காலையில் உணவளித்தால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய