பறவைகள் அனைத்திற்கும் அரசனாக விளங்கும் கருடன் மங்கள வடிவமாக கருதப்படுகிறார். கருடன் திருமாலின் வாகனத்திற்கு உரியவர். கருடன் காசிபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். கருடன் அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமைகள் இவரையே சேரும். விஷ்ணுவின் வாகனமாக கருடர் இருப்பதால் பெரிய திருவடி என்றும் மற்றொரு பெயரால் அழைத்து வருகிறார்கள்.
கருடன் வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசன் என்பவரை இடது கால் நகங்களிலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், கழுத்தின் பின்புறத்தில் குளிகனையை அணிந்திருப்பவர் கருடர் ஆவார். ஒருவருக்கு பாம்பு கடித்து விஷங்கள் அதிகரித்தால் கூட கருட வித்தியா மந்திரங்களை சொல்வதன் மூலம் விஷ முறிவு ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.
பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருடனை வழிபாடு செய்த பிறகே கோவிலின் மூலவரை வழிபடுதல் வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் நடக்கும் அனைத்து கும்பாபிஷேகங்களில் கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் பூர்த்தி நிலையை அடைகிறது. இத்தனை பெருமைகள் வாய்ந்த கருடனை எந்த கிழமையில் தரிசனம் செய்து வந்தால் என்ன பலன் என்று நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
ஞாயிற்றுக் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
ஞாயிற்றுக் கிழமையில் கருடரை தரிசனம் செய்து வந்தால் தீராத நோய்கள் குணமாகும். மருத்துவ செலவுகள் குறையும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவு கிடைக்கும்.
திங்கள் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
திங்கள் கிழமையில் கருடனை தரிசனம் செய்வதால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கும்.
செவ்வாய் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
செவ்வாய் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வருவதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி தைரிய மனநிலை வரும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும்.
புதன் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
புதன் கிழமைகளில் கருட தரிசனம் மேற்கொள்வதினால் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் அனைவரும் அழிந்துவிடுவார்கள். எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.
வியாழக் கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
வியாழக் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வந்தால் கண்டங்கள் நீங்கி ஆயுட்காலம் அதிகரிக்கும்.
வெள்ளி கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
வெள்ளி கிழமையில் கருட தரிசனம் செய்வதால் தீராத கடன் தொல்லைகள் நீங்கும். வீட்டில் பண வரவுகள் அதிகரிக்கும்.
சனி கிழமையில் தரிசனம் செய்தால் என்ன பலன்:
சனி கிழமையில் கருட தரிசனம் செய்யும் பயனாக நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்