குங்குமம் அணிவதன் சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குங்குமம் அணிவதன் சிறப்பு பற்றிய பதிவுகள் :

பெண்கள் குங்குமம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் வழக்கம். அனைத்து பூஜை சுப காரியங்களில் வைக்க கூடியது இந்த குங்குமம்.

திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக குங்குமம் வைக்க வேண்டும் என்பது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தும் இன்றும் இதை கடைபிடித்து வருகின்றனர். 

குங்குமத்தின் மகிமைகள்:

இப்போது உள்ள காலத்தில் சுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பதில் மிகவும் ஆர்வம் கொள்வதில்லை. குங்குமமிற்கு பதிலாக கடைகளில் விற்கக்கூடிய பொட்டுகளை மட்டுமே வைக்கின்றனர். பெண்கள் குங்குமத்தில் இருக்கக்கூடிய சிறப்புகளை தெரிந்துகொண்டால் கண்டிப்பாக இதை வைக்காமல் இருக்க மாட்டார்கள்.

குங்குமம் தயாரிப்பு முறை:

குங்குமம் எப்படி தயாரிப்பது என்றால் மஞ்சள், தண்ணீர், சுண்ணாம்பு, மற்றும் படிகாரம் போன்ற பொருள்களை வைத்து இந்த குங்குமத்தை தயாரிக்கின்றனர். குங்குமத்திற்கு சேர்த்த பொருள்கள் அனைத்தும் சிறிது நாள் கழித்து குங்குமம் இரும்பு சத்து நிறைந்ததாக மாறும்.

குங்கும சிறப்பு:

குங்குமத்தை மற்றொரு பெயரில் “கிருமிநாசினி” என்றும் கூறுகிறார்கள். அனைவரின் வீட்டு வாசலிலும் குங்குமம் வைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

குங்குமம் வைக்கும் முறை:

குங்குமத்தை புருவத்தின் இரு புறத்தின் நடுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வைக்கலாம். திருமண பெண்கள் நெற்றியின் நடு பகுதியில் குங்குமத்தை இடுதல் வேண்டும். இதனால் உடல் சூடு குறையும். பெண்கள் குங்குமம் அணிவதால் காந்த சக்தி அதிகரிக்கும்.

லக்ஷ்மி செல்வம் பெருகும்:

பெண்கள் தினமும் புருவத்தின் இடையில் குங்குமம் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் செல்வம் கிடைக்கும். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்து பயிற்சி செய்தால் சூரியனின் சக்தி முழுமையாக கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குங்குமத்தை எந்த விரலால் வைக்க வேண்டும்:

குங்குமத்தை பெரும்பாலும் வலது கையில் ஆள்காட்டி விரலால் தொட்டு இடுவது இயல்பு. ஆனால் குங்குமத்தை மோதிரம் அணியும் விரலால் மட்டும் இடுவது சரியான பண்பாடு. வீட்டில் எப்போதும் கட்டாயமாக குங்குமம் இருப்பது அவசியம்.

முக்கியமாக வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் அவர்களுக்கு கையில் குங்குமம், மஞ்சள் கொடுத்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். குங்குமம் அணிவதால் கணவரின் ஆயுள் கூட அதிகரிக்கும் என்பது ஐதீகம்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top