பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.
சித்ரா பௌர்ணமி இன்று (26ஆம் தேதி) பிற்பகல் துவங்கி மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை நிறைவடைகிறது.
விரதம் இருப்பது எப்படி?
சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.
மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பால் சேர்த்து பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
விரத பலன்கள் :
சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும்.
ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
chitra pournami chitra Pournami