நம் குரு மரபிற்கெல்லாம் குருவாக இருக்கும் ஐவ்வகை நந்திகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நம் குரு மரபிற்கெல்லாம் குருவாக இருக்கும் ஐவ்வகை நந்திகள் பற்றிய பதிவுகள் :

ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம் பெற்றிருக்கின்றன.

நந்திகளின் வகை தொகுப்பு

கைலாச நந்தி:

கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர்.

இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார்.

கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

அவதார நந்தி:

அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும்.

 சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி:

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். 

கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

சாதாரண நந்தி:

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். 

ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப் பெறுவதில்லை.

பெரிய நந்தி:

தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி.

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். 

கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

நந்தியெம் பெருமானின் குருவருளும் சிவபெருமானின் திருவருளும் என்றும் நீக்கமற கிடைக்கட்டும். 

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top