நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவான் பற்றிய பதிவுகள் :

நவகிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக வருபவர் தான் சனி பகவான். இவர் நமது வாழ்க்கையில் உள்ள இன்பம் மற்றும் துன்ப ங்களை அவரவரின் கர்ம வினைக்கு ஏற்ப வழங்கக்கூடியவர்.

சனி பகவான் நமக்கு எவ்வளவு துன்பம் அளிக்கிறாரோ அந்த அளவிற்கு இன்பங்களையும் கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் உலகிலுள்ள எல்லா வகை துன்பங்களையும் அனுபவிக்க வைத்து நம்மை சிறந்த அனுபவசாலியாகவும் துன்பப் படுவோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் மாறி எக்காலத்திலும் நம் பெயரை நிலைநாட்டக் கூடியவர்.

அனுபவ கல்வியை அளித்து உலகம் என்ன வென்றும் உறவுகள் நண்பர்கள் யார் யார் எனவும் தெளிவுப்படுத்தக்கூடிய ஆற்றலை கொண்டவர் சனி பகவான்.

சனி பகவானின் இயல்புகள் :

சனி பனி சூழ்ந்த அதிக குளிர்ச்சியடைந்த கிரகம் ஆகும். இவர் உயிரினங்களின் ஆயுளுக்கு அதிபதியாவார். உயிரினங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு இவரே காரகர்.

சனி பகவானின் புராணமும் வரலாறும் :

சூரியன் உஷாதேவி பிரபை, ரைவத இளவரசி ஆகிய மூன்று மனைவிகளை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களில் சமுக்ஞையிடம் அதிக பிரியம் கொண்டு இருந்தார். முதல் மனைவியான சமுக்ஞை பட்டத்து ராணியாக திகழ்ந்தார்.

சூரியனுக்கும் சமுக்ஞைக்கும் வைவ சுதமனு எமன் ஆகிய 2 மகன்களும் யமுனை என்னும் மகளும் பிறந்தனர். சூரியனிடம் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும்படி பலமுறை சமுக்ஞை சொல்லியும் சூரியன் குறைத்துக் கொள்ளவில்லை.

ஒரு நிலையில் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேற எண்ணிணார் சமுக்ஞை. தான் இல்லாத இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய நிழலைக் கொண்டு தன்னைப் போன்ற ஒரு பெண்ணை படைத்தார். அந்த பெண்மணியே சாயாதேவி ஆவார்.

சமுக்ஞை சாயாதேவியிடம் எப்படி நடந்து கொ ள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். ஆரம்பத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இன்றி சூரியனிடமும் சமுக்ஞையின் பிள்ளைகளிடம் உண்மையான மனைவி மற்றும் தாயாக நடந்துக் கொண்டாள்.

நாளடைவில் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சாவர்ணி, சனி என்ற பிள்ளைகளும் தபதி, விஷ்டி என்ற பெண்களும் பிறந்தனர். தன் பிள்ளைகளிடம் அதிக அன்பை காட்டிய சாயா தேவி சமிக்ஞையின் பிள்ளைகளிடம் மாற்றான் தாய் போல் நடந்து கொள்கிறார்.

இங்கு நடந்த எல்லாவற்றையும் எமன் அறிந்தி ருந்தாலும் சாயாதேவியிடம் எந்த பிரச்சனை யும் செய்யாமல் அமைதியாக இருந்தார். ஒரு சூழ்நிலையில் சாயா தேவிக்கும் எமனுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

சூரியனின் மீது சனி பகவானுக்கு கோபம் ஏற்படக்காரணம்? :

வாக்கு வாதத்தில் எமன் சாயாதேவியை கீழே தள்ளி உதைத்தார். இதை பார்த்துக் கொண்டி ருந்த சனி எமனிடம் இதை கேட்க எமன் தன்னிடம் இருந்த கஜாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக் கண்ட சாயா தேவி தன் மகனை அடித்த மற்றும் தன்னை உதைத்த எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள்.

சாயாதேவியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் தொடங்கின. அழுகிய காலுடன் எமன் சூரியனை காண சென்றார். சூரியனும் எமனின் நிலையை கண்டு நடந்தது என்ன எனக் கேட்டார். எமன் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சூரியனிடம் கூறினார்.

எமனின் மூலம் நிகழ்வுகளை அறிந்த சூரியன் அனைத்து பிரச்சனைகளையும் நல்ல முறையில் நிறைவு செய்து சமுக்கையுடனும் நிழல் தேவியான சாயாதேவியுடனும் இல்லற வாழ்க்கை நடத்தினார்.

இருப்பினும் சாயாதேவியின் வாரிசுகளுக்கு சரியான தந்தையாக நடந்து கொள்ளவில்லை இதனால் சனிபகவான் தன் தந்தையான சூரியனை வெறுத்து அவரை பகைவராக எண்ணினார்.

தன் தந்தை தனக்கு சரியான வழிகாட்டியாக இல்லாத போதும் சனிபகவான் தன் சொந்த முயற்சியால் கடுந்தவம் புரிந்து நவகிரக பரிபாலனத்தில் சிவபெருமானின் அருளால் இணைந்தார்.

மேலும் சனீஸ்வரர் என்னும் பெயருக்கு உரியவராக சிவபெருமானின் அம்சமாகவே இருந்தார். நவகிரக பரிபாலனத்தில் இணைந்தாலும் ஆதவனான சூரியன் மீது பகைக் கொண்டவராகவே இருந்தார்.

சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் :

ஒருசமயம் சனிபகவானின் பார்வை பலத்தால் விநாயகர் தலை இழந்து ஆனை முகம் எடுக்கும் நிலை உருவானது.

மனிதர்களான நளன் என்னும் அரசன் சனி பகவானின் பாதிப்பால் தன் நாட்டை இழந்து மனைவி மற்றும் மக்களை பிரிந்து நாடோடி யாக வாழ்ந்து பல சோதனைகளை கடந்து இறுதியில் அதற்கான மறு பலனான சித்தி என்னும் உன்னத நிலையை அடைய வழி காட்டினார்.

இராவணன் வீழ்ச்சி பாண்டவர் வனவாசம் சென்றது மற்றும் பிரம்மா சிறைப்படக் காரணமான நிகழ்வுக்கு காரணம் சனித்தேவர் ஆவார்.

இவர் தேவர் என்றும் அரக்கர் என்றும் தன் பலனை இடத்திற்கு இடம் மாற்றாமல் எல்லா இடங்களிலும் ஸ்திர தன்மையுடன் நடந்து கொள்ளும் நீதிமான்.

பரிகாரங்கள் :

சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும். காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.

கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.

பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்னர் சனி பகவானின் கவசத்தை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனிபகவான் வழங்குவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top