1. அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்
கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
2. பரணி : ஸ்ரீமகா பைரவர்
திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர்
திருவண்ணாமலை.
4. ரோகிணி: ஸ்ரீகால பைரவர்
பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
5. மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்
சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
6. திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்
ஆண்டாள் கோவில் (பாண்டிச் சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
7. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்
பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
8. பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்
(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
9. ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்
காளஹஸ்தி.
10. மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்
வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்
பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்
சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்
தர்மபுரி - மல்லிகார்ச்சுன - காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15. சுவாதி : ஸ்ரீ ஜடா முனி பைரவர்
புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்
திருமயம்.
17. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்
கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
18. கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்
சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.
19. மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்
சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20. பூராடம்: ஸ்ரீகால பைரவர்
அவிநாசி - அவிநாசியப்பர் கோவில்.
21. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்
கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
22. திருவோணம்: ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்
திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர், வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23. அவிட்டம்: அஷ்ட பைரவர் சந்நிதி.
சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.
24. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்
சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
25. பூரட்டாதி: கோட்டை பைரவர்
ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
26. உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்
சேங்கனூர் - சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27. ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்
தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.