வாராஹியை அவைதிக தேவதை, துர்தேவதை, க்ஷூத்ர தேவதை என்றும் கூறுகிறார்களா

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ வாராஹி பற்றிய பதிவுகள் :

வாராஹியை அவைதிக தேவதை, துர்தேவதை, க்ஷூத்ர தேவதை என்றும் கூறுகிறார்கள். இதைப்பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

சில சம்பிரதாயங்களில் வாராஹிக்கு மது மாமிசம் வைத்து பூஜிக்கும் வழக்கம் உண்டு. மது மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரம் பெற்ற சம்பிரதாயங்கள் மட்டும் அதை வைத்து பூஜிக்கலாம். மற்றவர்கள் வாராஹியை ஸாத்வீக நைவேத்தியங்களை ஸமர்ப்பிப்பதே சரியானது.

ஒரு சில தந்திரங்களின் கோட்பாடுகளினால் மது மாமிசத்தை ஸமர்பித்து உபாஸனை செய்கிறார்கள். இதை எல்லோராலும் செய்யும் விஷயம் கிடையாது. தந்த்ர சாஸ்திரத்தில் வாம மார்க்கத்தை சேர்ந்தவருக்கே இந்த அதிகாரம் உண்டு. அதாவது முறையாக அந்த மார்க்த்தில் தீக்ஷை பெற்றவருக்கு மட்டுமே.

மது மாமிச போஷிதர்கள் இக்காலத்தில் தன்னுடைய நா சுவைக்காக பசு பலியில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறு.

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

-வாராகி மாலை.

இதன் பொருள் வாராஹி தேனில் தோய்த்த வடை,பாயசம்,பொங்கல் முதலானவற்றையும் உண்ணும் வாராஹி, சில சம்பிரதாயத்தில் மது ,மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரமும், பரம்பரை வழியிலும் வந்த முறைகளையும் அவைதீகம், துராசாரம், க்ஷூத்ர தேவதை என்றெல்லாம் விமர்சிப்பது அவரவர்கள் அவர்களுக்கே தேடிக்கொள்ளும் பாவம்,வினை வழிபயன் என்று இந்த சூத்திரம் கூறுகிறது

இந்த பாடலை இடையில் சேர்த்தது என்று சொல்ல முடியாது. இலங்கையில் இருக்கும் பழம்பெரும் சுவடியிலும், நம் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மிகக் பழமையான சுவடியிலும் இந்த பாடல் உள்ளது. 

மது மாமிசமும் வாராஹி ஏற்கின்ற காரணத்தினால் இவளை க்ஷூத்ர தெய்வம் என்றும் துர் தேவதை என்பதும், அவைதிக தேவதை என்றும் சொல்லுவது அபத்தம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top