ஸ்ரீசக்கரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீசக்கரம் பற்றிய பதிவுகள் :

ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். 

அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும். தேவி கட்கமாலா கூறும் நவ ஆவரணம் - சிறு விளக்கம்

முதல் நவாவரனத்தில் முதல் ஆவரணம்

இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

முதல் நவாவரனத்தில் முதல் ரேகை

இது பூபுரம் எனப்படும். ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் நகரத்தின் (ஸ்ரீ புரம் என்பது தேவியின் சாம்ராஜ்யம் ) துவக்கம். நான்கு வாயில்களுடன் கூடியது. இதில் மூன்று ரேகைகள் உண்டு. இதன் தேவி திரிபுராபகவதி. 

முதலாம் ரேகை தேவதைகள் - பத்து மஹா சித்திகள் - வெண்மை நிறம்.

அணிமா சித்தி = சாந்த ரசம்
லகிமா சித்தி = அற்புத ரசம்
மகிமா சித்தி = கருணை ரசம்
ஈசித்வா சித்தி = வீர ரசம்
வசித்த்வ சித்தி = ஹச்ச்பய ரசம்
ப்ராகாம்ய சித்தி = பீபத்ச ரசம்
புத்தி சித்தி = ரௌத்ர ரசம்
இச்சா சக்தி = பயானக ரசம்
ப்ராப்தி சித்தி = சிருங்கார ரசம்

இரண்டாம் ரேகை தேவதைகள் -அஷ்ட மாதர்கள்- சிகப்பு நிறம் 

பிராஹ்மி = காமம்
மாகேஸ்வரி = குரோதம்
கௌமாரி = லோபம்
வைஷ்ணவி = மோகம்
வாராஹி = மதம்
மாகேந்திரி = மாத்சர்யம்
சாமுண்டி = புண்ணியம்
மகாலட்சுமி = பாபம்

மூன்றாம் ரேகை தேவதைகள் -முத்ரா தேவதைகள் - மஞ்சள் நிறம் 

சர்வ சம்க்ஷோபினி =சஹச்ர கமலம்
சர்வ வித்ராவினி = மூலாதாரம்
சர்வாகர்ஷினி =ச்வாதிச்டானம்
சர்வ வசங்கரி = மணி பூரகம்
சர்வோன்மாதினி = அனாகதம்
சர்வ மகான்குசா =விசுத்தி
சர்வ கேசரி = லம்பிகா ஸ்நானம்
சர்வ பீஜா = ஆக்ஞை
சர்வ யோனி = துவாத சாந்தம்
சர்வ த்ரிகண்டா = ஒன்பது ஆதாரம்

இரண்டாவது ஆவரணம்

பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

இது பதினாறு இதழ் கமலம். 5 பிராணன் , 5 ஞானேந்திரியங்கள் ,5 கர்மேந்திரியங்கள் ,மனம் ஆக பதினாறு இதழ்கள். வெண்மை நிறமுடைய இதில் பதினாறு ஆகர்ஷன சக்திகள் உண்டு. 

காமாகர்ஷினி =ப்ரித்வி
புத்தியா கர்ஷ்சினி =அப்பு
அஹங்கார கர்ஷினி =தேஜஸ்
சப்தா கர்ஷினி = வாயு
ச்பர்சா காசினி =ஆகாசம்
ரூபா கர்சினி =ச்ரோத்திரம்
ராசா கர்ஷினி =த்வக்
கந்தா கர்ஷினி =சக்சுஸ்
சித்த கர்ஷினி = ஜிக்வை
திரியா கர்ஷினி = க்ராணம்
ச்ம்ருத்யா கர்ஷினி = வாக்
காமா கர்ஷினி = கைகள்
பீஜா கர்ஷினி = பாதம்
ஆத்மா கர்ஷினி = பாயு
அம்ருதா கர்ஷினி = உபஸ்தம்
சரீரா கர்ஷினி = மனம்

மூன்றாவது ஆவரணம்

பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.இதன் தேவி திரிபுரசுந்தரி. செம்பருத்தி பூ போன்ற நிறம். சிவபெருமானைத் தத்துவமாகக் கொண்டது. எட்டு தாமரை இதழ்களால் ஆனது. எட்டு தேவதைகளை கொண்ட சக்கரம். பக்தனின் அச்சத்தை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் தேவதைகள் :

1) அனங்க குசுமா 
2) அனங்க மேகலா 
3) அனங்க மதனா 
4) அனங்க மதனாதுரா 
5) அனங்க ரேகா 
6) அனங்கவேகினி 
7) அனங்காகுசா 
8.) அனங்கமாலினி 

இந்த எண்மரும் மிகவும் உக்கிரமான தேவதைகள் . ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கும்,வழிபடுபவர்களுக்கும், அவர்களின் எதிரிகளை அடக்கி தேவையெனில் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார்கள்.

நான்காவது ஆவரணம்

இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது. பரமாத்மா பதினான்கு புவனங்களிலும் நிறைந்திருப்பதை விளக்கும் வகையில் பதினான்கு முக்கோணங்களை கொண்ட சக்கரம். இது மாதுளம் பூ நிறமுடையது . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுரவாஸினி . 

நாடிகள் 

1) அலம்புஸா 
2) குஹூ 
3) விஸ்வோதரி
4) வாசனா 
5) ஹஸ்தி 
6) ஜிஹ்வை பசோவதி 
7) பயஸ்வினி
8.) காந்தாரி
9) பூஷா 
10) சங்கினி 
11) சரஸ்வதி
12) இடை
13) பிங்கலை
14) சுஷும்னை 
எனும் பதினான்கு நாடிகளின் சக்திகளே பதினான்கு கோண தேவதைகள்.

தேவதைகள் :

1) ஸர்வ ஸம்க்ஷோபிணி 
2) ஸர்வ வித்ராவிணி 
3) ஸர்வா கர்ஷிணி 
4) ஸர்வாஹ்லாதினி 
5) ஸர்வ ஸம்மோகினி 
6) ஸர்வ ஸ்தம்பினி 
7) ஸர்வ ஜ்ரும்பிணி 
8.) ஸர்வ வசங்கரி 
9 )ஸர்வ ரஞ்சனி 
10) ஸர்வோன்மாதினி 
11) ஸர்வார்தஸாதினி 
12) ஸர்வ ஸம்பத்தி பூரணி
13) ஸர்வ மந்த்ரமயீ 
14) ஸர்வ த்வந்த்வ க்ஷயங்கரி

ஐந்தாவது ஆவரணம்

பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.திரிபுராஸ்ரீ என்னும் அம்பிகையை தலைவியாக கொண்ட இந்த சக்கரம் பத்து முக்கோணங்களை கொண்டது. குருவை இறையுருவாக வழிபடுதல் இந்த சக்கரத்தின் சிறப்பு.

தேவதைகள் சக்தியர் (10 வாயுக்கள் ) 

1) சர்வ சித்திப்ரதா ------ பிரானன் 
2) சர்வ சம்பத்ப்ரதா ------ அபானன் 
3) சர்வ ப்ரியங்கரி ------ வியானன் 
4) சர்வ மங்கள காரிணி ------ உதானன் 
5) சர்வ காமப்ரதா ------ சமானன் 
6) சர்வ துக்க விமோசனி ------ நாகன் 
7) சர்வ ம்ருத்யுப்ரசமனீ ------ கூர்மன் 
8.) சர்வ விக்ன நிவாரணி ------ கிரிகரன் 
9) சர்வாங்க சுந்தரி ------ தேவதத்தன் 
10) சர்வ சௌபாக்ய தாயினி ------ தனஞ்சயன்

ஆறாவது ஆவரணம்

அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.வழிபடுவோரின் ஜீவனை பாதுகாக்கும் சக்கரம். இதில் பத்து கோணங்கள். செம்பருத்தி பூ நிறம். இதன் தலைவி திரிபுரமாலினி.

இந்த ஆவரண தேவதைகள் 

1) சர்வக்ஞா 
2) சர்வ சக்தி 
3) சர்வைஸ்வர்ய ப்ரதா 
4) சர்வ ஞானமயீ 
5)சர்வ வியாதி வினாசினி 
6)சர்வா தார ஸ்வரூபா 
7)சர்வ பாவஹரா 
8)சர்வானந்தமயீ 
9) சர்வரக்ஷா ஸ்வரூபினி 
10) ஸர்வேப்ஸித பலப்ரதா 

ஏழாவது ஆவரணம்

புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.ரோகம் என்பது வியாதி, ஹரம் என்பது நீக்குதல். அஞ்ஞானம் என்பதே எல்லா ரோகங்களுக்கும் காரணம் .இந்த சக்கரத்தின் தேவி திரிபுராசித்தா. சிகப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கப்படுகிறாள். எட்டு முக்கோணங்களை கொண்டது இந்த ஆவரணம். இந்த சக்கரத்தை வழிபடும்போது அறியாமை மட்டுமின்றி உடல் ரீதியான வியாதிகளும் நீங்கும். 

இந்த ஆவரண தேவதைகள் : 

1) வசினீ 
2)காமேச்வரி 
3)மோதினி 
4)விமலா 
5)அருணா 
6)ஜயிநீ 
7)சர்வேச்வரி 
8)கௌலினி 
சீதம், உஷ்ணம், சுகம், துக்கம், இச்சை, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவைகள் சீர்செய்யப்படுவதால் மனமும், உடலும் பாதுகாக்கப்படுகிறது. 

எட்டாவது ஆவரணம்

மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.சர்வ சித்தி என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும். இது மூன்று கோணங்களை உடையது. பாசம், அங்குசம், பாணம், கரும்புவில் ஆகிய ஆயுதங்களின் மண்டலங்கள் இவற்றில் உள்ளது. 
இந்த யந்திரம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி வடிவமானது. அக்னி, சூரிய, சந்திர வடிவமான இந்த ஆவரணத்தில் 

1) காமேச்வரி 
2) வஜ்ரேஸ்வரி 
3) பகமாலினி 
என மூன்று தேவதைகள் . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுராம்பா.

ஒன்பதாவது ஆவரணம்

பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.முழுநிறைவான ஆனந்தமயமான நிலையில் சிவனோடு இணைந்து அன்னை தம்பதிசமேதராக அருள் பாலிக்கும் இடம். ஸ்ரீ வித்யை, ஸ்ரீ சக்கர வழிபாடு சாக்த மரபு என்பது சிலர் கருத்து. சாக்தம் என்பது அம்பாளை மட்டுமே வழிபாடு செய்வது . ஆனால் சிவனையும் சக்தியையும் இணைத்து சிவசக்தி ஐக்கிய ரூபமாக வழிபடுதலே ஸ்ரீ வித்யையின் சிறப்பு. சிவமின்றி சக்தி இயங்காது. சக்தி இன்றி சிவமும் அசையாது.

இதர எட்டு ஆவரணங்களையும் பூஜித்து படிப்படியாக பண்பட்டு ஒன்பதாவது ஆவரண பூஜையின் போது உபாசகன், தான் பரபிரம்மத்தின் அங்கம், தன்னுள் இறைவன் நிறைந்திருக்கிறான் என்ற உணர்வை அடைகிறான்.

இந்த ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருந்த அன்னையே ஸ்ரீ மகாதிரிபுரசுந்தரி. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியும் இந்த அன்னையே.

ஒன்பதாவது ஆவரணத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு காமேஸ்வரி என்றும் சிவனுக்கு காமேஸ்வரன் என்றும் திருநாமம். இந்த சிவசக்தி ஐக்கிய நிலையே இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் அனைத்து தெய்வங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ஈரேழு லோகம், உயிர்கள் அனைத்திற்கும் மூலம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top