27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களும் பற்றிய பதிவுகள் :

1. அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்

கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

2. பரணி : ஸ்ரீமகா பைரவர்

திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர் -

திருவண்ணாமலை.

4. ரோகிணி: ஸ்ரீகால பைரவர் -

பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5. மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர் -

சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6. திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்

ஆண்டாள் கோவில் (பாண்டிச் சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)

7. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர் -

பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.

8. பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்

(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9. ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர் -

காளஹஸ்தி.

10. மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர் -

வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்

பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்

சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்-

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்

தர்மபுரி- மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15. சுவாதி : ஸ்ரீ ஜடா முனி பைரவர்

புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்

திருமயம்.

17. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்

கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18. கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்

சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

19. மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்

சீர்காழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20. பூராடம்: ஸ்ரீகால பைரவர்

அவிநாசி - அவிநாசியப்பர் கோவில்.

21. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்

கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22. திருவோணம்: ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர் -

திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர் - வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23. அவிட்டம்: அஷ்ட பைரவர்

சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி .

24. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்

சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25. பூரட்டாதி: கோட்டை பைரவர்

ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.

26. உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்

சேங்கனூர் - சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27. ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர் -

தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top