வெற்றி தரும் விஜயதசமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வெற்றி தரும் விஜயதசமி பற்றிய பதிவுகள் :

அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும். அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றியடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமி யன்று, காலையில், சரஸ்வதிக்குபுனர் பூஜை செய்ய வேண்டும். 

நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 10 ஆம் நாள், விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத் திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசு ரனுடன் எட்டு நாட்கள் போர் செய்துஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயத சமி என்று கொண்டாடு கிறோம்.
 
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றி கரமாக அமையும். அன்றுதான் குழந்தை களுக்கு வித்யா உபதே சம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புத மான நாளாக கொண் டாடுவார்கள்.

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னா ளில், ஆரம்ப கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என் பது ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

பொதுவாக கோவில் களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமி யன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. 

அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தி யை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் விரதமி ருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந் தால் நினைத்த காரி யங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

நவராத்திரி பத்தாம் நாள் பூஜை முறை: 

தேவி : அம்பிகை விஜயாம்பாள் (பார்வதியின் ஒரு அம்சம்) விஜய தசமியையொட்டி பூஜையறையில் மலர் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், நைவேத்யம் செய்ய வேண்டும். 

விஜய தசமிக்கு மானம்பு என்றும் ஒரு பெயர் உண்டு. மானம்பு என்றால் மகாநோன்பு என்றும் ஒரு பொருள் கொள்ளப்படும். மானம்பு என்பதற்குத் தலைவர் அம்பு போடும் நாள். அம்பு போட்டு அசுரனை அழிப்பதை மானம்பு என்று சொல்வர்.

அசுரப்போரில் வன்னி மரமாக உருமாறி நின்ற மகிடாசுரனை வெட்டு வது போன்று வாழை வெட்டு இடம் பெறு கிறது. 21 தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற கேதார கெளரி விரதமும் இன்று ஆரம்பாகின்றது. 

இந்த நவராத்திரி நாட்களில் எல்லாவற் றுக்கும் மேலானதாக சண்டி ஹோமம் கருதப்படுகின்றது. சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்த வடிவான வள். இந்த சண்டி ஹோமத்தின் சிறப்பு மூன்று தேவிகளையும் ஒரே வடிவமாக பூஜை செய்வதே ஆகும். விஜயதசமி நாளில் இதை செய்வதால் அதிக அளவில் நற் பலன்கள் உண்டாகும்.

ஒன்பது இரவுகளில் அம்மனை வழிபட்டு தங்களிடம் உள்ள குற்றங்குறைகளை நீக்கி நன்னடத்தை பெற்று உயர்ந்த ஞானத்தை அடைந்து இறுதியில் பத்தாவது நாள் பகலில் மேற்கூறி யவற்றை பெற்றதன் அடையாளமாக வெற்றி யைக் கொண்டாடி அம்பிகைக்கு மக்கள் இன்று நன்றி செலுத்துகின்றனர்
என்பதும் ஐதீகம்.நாமும் இன்று அம்பிகைக்கு நன்றிசொல்லி அவளரு ளைப் பெற்றிடுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top