நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ‌சதி தாண்டவ மூர்த்தி பற்றிய பதிவுகள் :

தன் மகளான தாட்சாயினி எனும் சதிதேவியை சிவபெருமானை திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். 

அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறைந்தார். 

அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். 

மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். 

பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார்.

ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு மேஷத்தின் தலையையை பொருத்தினார்.

பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். 

அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே "சதி தாண்டவ மூர்த்தி" எனப்படுகிறது.

இதனைக் கண்ட மகா விஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.

இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரளமாநிலம் நேப்பியர் மியூசித்தில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post