தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆலயங்களிலும் ஆகம விதிப்படி தான் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இது காலங்காலமாக நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு பொதுவாக காரண, காமிகம், மகுடம் ஆகமம் மரபுபடி தான் காலங்காலமாக நடைபெறுகிறது.
சிறு தெய்வங்களுக்கு ( மாரியம்மன், காளி, ) அருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் இருக்கும் குருக்களே விழாக்காலங்களில் பூஜை செய்வார்.
அக்கோயிலில் எந்த ஆகமமோ அதன்படியே சிறுதெய்வங்களுக்கு பூஜையும் செய்வார். ஆக சிறு தெய்வங்கள் கோயில்களிலும் ஆகம பூஜை உண்டு.
சிவாகமம் சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அருளச் செய்யப்பட்டடது. சிவாகமங்கள் பொதுவாக கிருந்தத்தில் இருக்கும். வேதம் வேறு சிவாகமம் வேறு.
இக்காலத்தில் சிவாகமம் கற்றவர்கள் சைவ சித்தாந்தம் , தேவாரம் படிக்க வேண்டும் என்று நிபந்தனை உண்டு. வைணவத்தில் பாஞ்சரத்ன , வைகானச ஆகமம் முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் இந்த ஆகமங்கள் சிவபெருமான் ரிஷிகளுக்கு உபதேசத்தின் வாயிலாக காலங்காலமாக குரு முகம் நின்று பயின்று வருகின்றனர்.
ஆகம பூஜைகள் பற்றி திருமூலர் சித்தர் சிவாகம சிறப்பை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறார்.
