குத்துவிளக்கு ஏற்றும் முறைகள் மற்றும் பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குத்துவிளக்கு ஏற்றும் முறைகள் மற்றும் பலன்கள் பலன்கள் பற்றிய பதிவுகள் :

நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. நம் வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்று தான். அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

குத்துவிளக்கு ஏற்றும் திசைகளின் நன்மை மற்றும் தீமைகள்:

குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.

மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் மற்றும் பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.
 
தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம். பெரும் பாவம் உண்டாகும்.
குத்துவிளக்கு ஏற்றும் முகங்களின் நன்மைகள்:

குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும்.

இரு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி உண்டாகும்.

நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி உண்டாகும். மேலும் ஐஸ்வர்யம், லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

குத்துவிளக்கு ஏற்றும் திரிகளின் நன்மைகள்:

தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.

வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும்.

புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும்.

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வந்து மூதேவி அகன்று விடுவாள்.

குத்துவிளக்கு ஏற்றும் எண்ணெய்களின் நன்மைகள்:

நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி உண்டாகும்.

விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.

நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலன் கிடைக்கும்.

குறிப்பு:

கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணெய்களையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவிக்கான ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top