சூலத்தின் மேல் எலுமிச்சம்பழம் வைப்பது ஏன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூலத்தின் மேல் எலுமிச்சம்பழம் வைப்பது பற்றிய பதிவுகள் :

கோவில்களின் முன்பகுதியில் அல்லது காவல் தெய்வங்களின் அருகில் இருக்கும் சூலாயுதத்தின் மேல்பகுதியில் எலுமிச்சை குத்தப்பட்டிருக்கும்.

எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள். மற்ற கனிகளை காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி அதிகம் கொண்டது என்பதால் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்பட்டிருக்கும். எலுமிச்சை அம்மனுக்கு உரித்தானதாகும்.

இது இயல்பாகவே தெய்வீக சக்திகளையும், மந்திரங்களை தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையையும் பெற்றது. தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது.

கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.

இம்மாலையை தயாரிப்பவர்கள் ஒரே அளவிலான நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்க்க வேண்டும். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது, அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும், கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top