விருப்பங்களை நிறைவேற்றும் எளிய மாவிளக்கு பரிகாரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விருப்பங்களை நிறைவேற்றும் எளிய மாவிளக்கு பரிகாரம் பற்றிய பதிவுகள் :

மனிதவாழ்வில் பலவிதமான விருப்பங்கள் இருக்கின்றன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் என்றில்லாமல், பலவித பொருட்களை வாங்குவதும் நமக்கு விருப்பமாக உள்ளது. 

இவ்வகை விருப்பங்கள் பல காரணங்களால் தடைபட்டுப் போகலாம். இந்த தடை நீங்க மாவிளக்கு பரிகாரத்தை கேட்டதை அருளும் வாலை குழந்தை ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி அம்பாள் முன்பு தொடர்ந்து ஒன்பது வாரம் செய்வது சிறப்பு. தவிர்க்க இயலாத காரணமாணால் வீட்டிலேயே செய்யலாம். 

நம்ம சகல விருப்பங்களை குறிப்பாக திருமணத்தடை விலக, குழந்தை பாக்கியம் பெறவும்.தன் விருப்பத்தை நிறைவேற்றி தர தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் பெளர்ணமி திதி நாள், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை பாலாம்பிகை சந்நிதி முன்பு செய்து பலன்தரும்

இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். 
பாலா திரிபுர சுந்தரி முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும். 

விளக்கேற்றியதும் நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். 

அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. 

ஒரு நாழிகையாவது (24நிமிடம்) விளக்கு எறிவது அவசியம். வேண்டுதல் விளக்கு அனணயாமல் குழந்தையை பார்ப்பது போல நிற்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். பிரார்த்தனை நிறைவேறிய பிறகும், தங்கள் விருப்படி அபிஷேக ஆராதனையும், புடவை சாற்றியும் அன்னதானம் செய்தும் மேற்கண்டவாறு மீண்டும் ஒருமுறை விளக்கேற்றி வைத்து வழிபடவேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top