ஐஸ்வர்யம் அருளும் அட்சய திருதியை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐஸ்வர்யம் அருளும் அட்சய திருதியை பற்றிய பதிவுகள் :

அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. இன்றைய தினம்‌ கல்‌ உப்பு, மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ இடைக்கும்‌. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள்‌ அட்சய திருதியை 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. 

இன்று தானம், தியாகம், துறவு மற்றும் தவம் போன்றவற்றைச் செய்வது குறிப்பாக பலனளிக்கும். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இந்த உலகத்தில் எத்தனை விலை உயர்ந்த பொருளை தானமாகக் கொடுத்தாலும், அதைப் பெறுபவனின் மனம் இன்னமும் இதனை சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்றும், இன்னமும் வேண்டும் என்றே ஆசை கொள்ளும். 

ஆனால் வயிறு நிறைந்துவிட்டால் மனமும் நிறைந்துவிடும், போதும் என்ற எண்ணமும் உண்டாகும், வயிறு நிறைந்தால் மனமும் குளிரும். அன்னதானம் செய்தவனை மனமார வாழ்த்திச் செல்வர். தானத்தைக் கொடுப்பவனும் சரி, பெறுபவனும் சரி மனம் நிறைவது அன்னதானத்தில் மட்டுமே. அதனால்தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள். 

மேலும் இந்நாள் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். நமது இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. 

மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top