பிரதக்‌ஷணம் மற்றும் பரிக்ரமம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரதக்‌ஷணம் மற்றும் பரிக்ரமம் பற்றிய பதிவுகள் :

கடவுளை தேடி கோவிலுக்கு செல்கிற போது, அங்கே நாம் செய்யக்கூடிய பிரத்யேமான செயல்கள் சில உண்டு. அதில் ஒன்று தான் கோவிலை சுற்றி வருவது.

கோவிலை சுற்றி வருவதற்கு இரு வார்த்தைகள் சொல்வது வழக்கம் பிரதக்‌ஷணம் மற்றும் பரிக்ரமம். இரண்டும் ஒன்றா என்றால் இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

பரிக்ரமம் என்பது இயற்கையை சுற்றி வருவது. உதாரணமாக, மலையை சுற்றுவது, யாக குண்டம், நெருப்பு ஆகியவற்றை சுற்றுவது, துளசி செடியை சுற்றி வருவது போன்ற இயற்கை அம்சங்களை சுற்றி வருவது பரிக்ரமம் என்று அழைக்கப்படுகிறது. 

இறைவன் இருக்கின்ற இடத்தை சுற்றி வருவது பிரதக்‌ஷணம் ஆகும். இவ்வாறு செய்வதற்கு ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் உண்டு.

பிரதக்‌ஷணம் எனும் வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் உண்டு. பிர - எனும் ஒலிக்கு பயத்தை நீக்குதல் என்று பொருள். த- எனும் ஒலிக்கு முக்தியை அருள்வது என்று பொருள். க்‌ஷ - எனும் ஒலிக்கு சர்வ வியாதி நிவாரணம் என்று பொருள் நம் - எனும் ஒலிக்கு செல்வ வளம் என்று பொருள்

பிரதக்‌ஷணம் என்பதற்கு வலது புறமாக செல்வது என்று பொருள். எனவே கோவில் பிரதக்‌ஷணம் எப்போதும் இடது புறமாக ஆரம்பித்து வலது புறமாக முடிப்பதாகும். 

மூன்று முதல் நேர்த்திகடனுக்கேற்ப பிரதக்‌ஷ்ணம் செய்யப்படுவது வழக்கம். ஏன் இவ்வாறு செய்கிறோம் எனில், ஒருவர் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் கவனக்குவிப்புடன் செய்வதால் அவர் அந்த தருணங்கள் இறை சிந்தனையில் ஒன்றியிருக்க முடிகிறது.

அதுமட்டுமின்றி நாம் ஏற்றிருக்கும் பொருள்தன்மையிலான பாரங்கள், எதிர்மறை ஆற்றல்களிலிருந்து மனம் விடுதலை ஆகிறது. ஒருவர் பற்றுகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த சுற்றுதல் உதவும். அதனால் இந்த உலகம் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றிவருவது. 

இதனால் தான். ஒருவர் பூஜையை முடித்துவிட்டு பிரதக்‌ஷணம் செய்வதை அத்ம பிரதக்‌ஷணம் என அழைக்கப்படுகிறது. 

ஒரு வட்டத்தை மையமின்றி அமைக்க முடியாது அதை போலவே இறை எனும் மையத்தை சுற்றி வருவதும், நம்மை சுற்றி எப்போதுமே இறை அதிர்வு நிரம்பியிருக்கிறது என்பதை உணரவும் தான் பிரதக்‌ஷணம் செய்யப்படுகிறது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top