சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது !
சிவனுடைய அருளையும் அன்பையும் பெறுவதற்கு வில்வ மாலை ஒன்று போதும். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் ஏழு ஜென்ம பாவங்களும் போகும்.
சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். வில்வத்தில் பல வகைகள் உண்டு. மகா வில்வம், கொடிவில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்று பல வகைகள் உண்டு. மூன்று, ஐந்து, ஏழு இதழ்கள் கொண்ட வில்வ இலைகள் இருந்தாலும் மூன்று இதழ்கள் கொண்ட வில்வ இலைகளே பூஜைக்கு பயன்படுத்தப்படு கின்றன.
வில்வத்தில் மஹாலஷ்மி வாசம் செய்கிறாள். ஸ்ரீ பலம், சிரேஷ்ட வில்வம், கந்தபலம் என்று வில்வம் வடமொழியில் அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனின் இச்சா, கிரியா ஞான சக்தி வடிவமாய் ஈஸ்வரனின் அருளால் பூமியில் வில்வம் உருவானது. அதனாலேயே ஈஸ்வரனுக்கு பிடித்தவற்றில் முதன்மை யானதாகவும், பூஜைகளில் முதலிடத்திலும் வில்வம் இருக்கிறது. ஒரு வில் வத்தினால் பூஜை செய்தால் அது இலட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்கு சமம் என்று சொல்வார்கள்.
வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் சிறப்பு மிகு விருட்சம் ஆகும் இவ் விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் , நன்மைகளும் அடைவார்கள்.
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் , துன்பங்களும் சூரியனைக் கண்டபனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவபெருமானின் திருவருட் கடாட்சத்தைப் பெற முடியும்.
வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும் 'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த முடியும். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம்.
வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.சிவனின் அருளைப் பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.
வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும். வில்வப் பழம் அபிஷேகத்துக்கு உகந்ததாகும்.மருத்துவ பயன் உடையது வில்வ மரத்தின் கட்டையானது யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. வில்வ மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும். ஆனால், அதை பக்தி சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப் போது பூஜைகள் செய்வது நல்லது.108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் அனைத்தும் சிவரூபம். வேர்கள், கோடி ருத்திரர்கள். வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதப்படுகிறது .
ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே வில்வம்தான்.ஒரு வில்வ இலை யைக்கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது . சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும் வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.
கும்பகோணம் சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம். சிவனுக்குப் பிரியமாகவும் .ஆரோக்கியத்து க்கு அரணாகவும் திகழ்கிறது.
வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மை உடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம் என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.
மகாவில்வம் வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம்,காசி வில்வம்,ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை. இதில் மகாவில்வத்தை கோவில்,ஆசிரமம், ஜீவ சமாதி போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும். மகா வில்வம் வித்தியாசமானது. 5,7,9,11,12, இதழ்கள் கொண்டதாக திகழ்கிறது.
மகாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு, ஒன்பது, பனிரெண்டாக இருக்கும். சிவ பெருமானை மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது. பன்மடங்காய் பலன்தரும் அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும். மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத் முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம் போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக உண்டானது.
இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண வில்வ மாலையாக தரிசிக்கலாம். மகா வில்வத்தின் இலைகளை அதிகமாகப் பறித்தல் கூடாது. மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூஜைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.