சனீஸ்வரர் பற்றிய சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன் என்றும் சனைச்சரன் என்றும் பெயர்கள் உண்டு.

எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை. கணபதி, அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும். இவை நம்மில் பெரும்பாலானோர் அறிந்த தகவல்கள். 

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரியகுமாரனே சனி பகவான். இவர் யமதர்மராஜனின் சகோதரன்.

சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனிபகவான் தான்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார்.

ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும்.

இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். ஒருவரது ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் இவர் சஞ்சரிக்கும்போது, அந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. 

அங்கிருந்து ஜன்ம ராசிக்கு வந்து, அதன் பின்பு ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் சஞ்சரித்து முடியும் ஏழரை வருடங்கள் இது. இதனை மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வார்கள்.

ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும்.

தர்மம் தவறாமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நியாய உணர்வுடனும் வாழ்பவர்களை சனீஸ்வர பகவான் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார். 

தர்மமும் ஒழுக்கமும் தவறியவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை.
சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலாதேவி. 

காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. சனி பகவானுக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர்.

ரத்தினம் : நீலம்
திசை : மேற்கு
ஆசனம் : வில் வடிவம்
நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திராடம்
தசா காலம் : 19 ஆண்டுகள்
காரகம் : ஆயுள்
பிணி : வாதம் தொடர்பானவை
உபகிரகம் : குளிகன் (மந்தன்)
ராசியில் சஞ்சரிக்கும் காலம் : 2 ½ வருடங்கள்
தானியம் : எள்
பஞ்சபூதம் : வாயு
ஆட்சி வீடு : மகரம், கும்பம்,

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top