ஆடி அமாவாசை : எளிய தர்ப்பண பூஜை முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசை : எளிய தர்ப்பண பூஜை முறைகள் பற்றிய பதிவுகள் :

தர்ப்பணம் இடுதல் என்றால் ' பித்ருக்களை நினைத்து அவர்களை முறையாக வணங்கி , ஆசி பெறுதல் என்று பொருள் . தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்து வரும் தமது வம்சா வழியினர் அன்னதானம் , உழவாரத் திருப்பணி , இலவச மருத்துவ உதவி , கல்வி தானம் , வஸ்திர தானம் போன்ற இறைப்பணிகளில் ஈடுபடும்போது . பித்ருக்கள் ஆனந்தத்துடன் தங்கள் ஆன்மீகச் சக்தியை அளிக்கின்றனர் . 

பித்ருக்களின் இந்த ஆசீர்வாதமே தன பாக்யம் , வாகனம் , வீடு அமைதல் , திருமணம் கைகூடுதல் , பிள்ளைப்பேறு போன்ற அனுக்கிரகங்களாக மாறி அமைகின்றன . 

" தர்ப்பை , எள் , நீர் கொண்டு தர்ப்பணம் இடுவது ஏன் ? " 

மனிதர் உயிர் வாழ அன்னம் தேவை . தேவர்கள் அதனை அக்னி மூலமாகவும் , கந்தர்வர்கள் பசுநெய் மூலமாகவும் , பித்ருக்கள் நீர் மூலமாகவும் ஆஹூதிகளை ஏற்கின்றனர் . " தர்ப்பைப் புல் தேவலோகத்து மூலிகை . எத்தகைய மின் சக்தியையும் தாங்கக் கூடிய வல்லமை வாய்ந்தது . கடும் மின்னல்களை ஏற்கக் கூடிய சக்தி கொண்டது . 

மேலும் பல்லாயிரக்கணக்கான பித்ரு லோகங்களில் விதவிதமான பித்ருக்கள் தங்கள் தினசரி பூஜையில் எள் தானிய மணிகளைக் கொண்டு பித்ரு லோகங்களின் நாயகரான ஸ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிக்கின்றனர் . அவர்தம் உடலிலிருந்தே எள்ளாகிய புனிதமான தாவரம் தோன்றியது . மேற்கண்ட காரணங்களால்தான் தர்ப்பண பூஜைக்கு எள் , நீர் , தர்ப்பை பயன்படுத்தப்படுகின்றன . 

தர்ப்பண பூஜைகள் யாவருக்கும் உரித்தானதா ? 

இப்பூவுலகில் மானிடப் பிறவி எடுத்த அனைவருமே தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றியே தீர வேண்டும் . ஜாதி , மத , இன , மொழி பேதமின்றி அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய இறை வழிபாட்டு முறைகளில் முதலிடம் வகிப்பது தர்ப்பண பூஜையே . அதுவும் பகுத்தறிவுடன் கூடிய ஆறறிவு உடையவனாக மனிதன் இருப்பதால் பூலோகத்திலுள்ள ஓரறிவு முதல் ஐந்து , ஆறு அறிவுடைய ஏனைய ஜீவன்களுக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய கடமை உண்டு . 

" தர்ப்பண பூஜை முறைகளும் , மந்திரங்களும் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்படுவதால் தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் குறைந்து விட்டதா ? 

மனிதனின் அசிரத்தையான மனப்பாங்கும் , குறுகிய மனப்பான்மையுமே இதற்கு காரணம் ! தொலைக்காட்சிப் பெட்டி ( TV ) முன் மணிக்கணக்காக அமர்ந்திருப்பதோ . திரை அரங்குகளில் பல மணிநேரம் கால் வலிக்க நின்று கொண்டிருப்பதோ கடினமாகத் தெரியவில்லையே ! " உண்மையான ஆர்வத்துடன் தக்க பெரியோர்களை நாடி . பயின்று , முறையான தர்ப்பணம் அளித்தால் விசேஷமான பலன்கள் நிச்சயம் உண்டு . 

இதை அனைவரும் மனதில் கொள்ளட்டும் ! " தர்ப்பண பூஜை மட்டுமல்ல , அனைத்து பூஜை முறைகளையும் அந்தந்த கால கட்டத்திற்கேற்பவும் , மனிதனின் தேவைக்கேற்பவும் . எளிமையாக முறைப்படுத்தி சித்தர்கள் வழித்தோன்றல்கள் மூலம் அறிவித்திருக்கிறார்கள் . 

பிதுர் தோஷமும் , ஆடி அமாவாசையும் .... 

நம் முன்னோர்கள் தெரிந்தும் , தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் , நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல முன்னோர்கள் இறந்த திதி அன்று ஆண்டு தோறும் உங்களுக்கு அவர்களை பிடித்தாலும் , பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும் .

ஆண்டு தோறும் அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல் இறந்த முன்னோர்கள் ஏமாற்றம் அடைந்தால் .... திருமணத்தடை தொழில் தடை அல்லது வேலையின்மை • குழந்தை பாக்கிய தடை . . நீங்கா வறுமை அகால மரணம் தீரா நோய் • எண்ணிய காரியம் நிறைவேறாமை போன்ற அசுப பலன்கள் தருகிறது.

இறந்த திதி அன்று சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி , புரட்டாசி , தை மாதங்களில் வரும் அமாவாசையில் ஏதேனும் ஒரு அமாவாசையில் சிரார்த்தம் செய்யலாம் . தாய் , தந்தையை குறிக்கும் சூரியன் , சந்திரன் இணைந்த நாளே அமாவாசை ஆகும் . 

ராகு பாட்டனாரையும் , கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம் . பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் நமது முன்னோர்களை குறிக்கும் . 5 அல்லது 9 ம் இடங்களில் பாவ கிரங்கள் இருப்பது , 5 ( அ ) 9 ம் இடத்து அதிபதிகளுடன் பாவ கிரகங்கள் இணைந்து இருப்பது , 5 ( அ ) 9 ம் அதிபதி நீசம் அடைவது , 5 ( அ ) 9 ம் அதிபதி அஸ்தமணம் அடைவது , 5 ( அ ) 9 ம் அதிபதி லக்கனத்துக்கு 6,8,12 ல் மறைவது , சூரியன் , சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணைவது , போன்ற காரணங்களினால் சில விதி விலக்குகளுக்கு உட்பட்டு அசுப பலன்களை தருகிறது . 

அகால மரணம் அடைந்தவருக்கு தில ஹோமம் ராமேஸ்வரத்தில் செய்து அவர்களை சாந்தி செய்து நற்பலனை பெறலாம் . நதிக் கரைகளிலும் , கடற்கரையிலும் மூத்தோர் காரியங்களை செய்து முழுக்கு செய்வது சிறப்பு . இயலாதவர்கள் அவர்களின் இல்லத்திலும் செய்யலாம் . 

திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி அன்றே திருக்குறளில் தெளிவாக தெரிவித்துள்ளார் . காஞ்சி பெரியவர் வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும் , குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள் போன்றது என்று தெரிவித்து உள்ளார் . 

மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில் கோலமிடாமல் வழிபட வேண்டும் . சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது . பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் எதிர் வரும் ஆடி அமாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் . 

ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் என்பது மறையோர் பார்பான்ளுக்கு இன்றியமையாத ஒன்றாகும் . பௌத்ததில் சில பிரிவுகளும் பித்ரு தர்ப்பணம் செய்வதை கடை பிடிக்கின்றனர் . 

பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் :

1. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து காலை 7 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது . 

2.எள்ளுடன் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் அளிக்கப்பட வேண்டும் . 

3.பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது . தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம் . 

4. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி , தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம். 

5.தர்ப்பணங்கள் எப்போதுமே நதிகளின் கரைகளில் அல்லது கடற்கரையில் செய்யப்படவேண்டும் . 

6. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம் , திதியை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் . ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும் . 

7. தர்ப்பணம் செய்யும் போது தாய் , தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும். 

8. அமாவாசை , சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு . 

9. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி , கெட்டவர்களாக இருந்தாலும் சரி , மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள் . இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும் . 

10. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது . கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும் . 

11. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் . 

பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஆன்மீக பூர்வமாக விளக்கங்கள் தந்துள்ளேன் என்பது ஒருபுறம் இருந்தாலும் பித்ரு தர்ப்பணம் செய்வதால் நமது பூர்வீக வரலாறு காப்பாற்றபடுகிறது என்பது யதார்த்த உண்மையாகும் . அதாவது நாம் தர்ப்பணம் செய்யும் போது தாய் , தந்தை குலம் கோத்திரத்தின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்வதோடு தாய் மற்றும் தந்தை வழி வழியில் 6 தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்கிறோம். 

இப்படி நாமும் நமது வாரிசுகளும் தொடர்ந்து செய்வதால் நமது மூதாதையர்களின் பெயர் வரலாறு மறக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லபடுகிறது . பிதுர் தர்ப்பணம் தொடர்ந்து செய்யடுவதால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம் வரலாறு அழிவதுமில்லை .

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top