ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம் பெற வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளே சரஸ்வதி பூஜையாகும்.
தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டாலும் கடைசி 3 நாட்கள் சிறப்பு வாய்ந்தது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வரும் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.
கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி 5ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி வரலாறு :
மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து அழித்ததன் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை
ஆயுத பூஜை :
உயிர்ப்பொருட்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.
இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சரஸ்வதி பூஜை :
கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்கும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது. கலசம் வைத்து கலைவாணியே எழச்செய்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம். சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும்.
அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானமாக வழங்கலாம்.
வெற்றி தரும் விஜயதசமி :
புதன்கிழமையன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை.
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வித்யாரம்பம் :
விஜயதசமி நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுப்பது வாடிக்கை. இதன் மூலம் குழந்தைகளின் கல்விவளம் பெருகும் என்பது ஐதீகம்.