சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் பூஜைக்கு உகந்த நேரம்

0

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய பதிவுகள் :

சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா உலகெங்கும் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரிய நாள். இன்று முதல் அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.

'மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு' என்பது சாஸ்திர மொழி. அதாவது, நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜையைத் தொடங்க முதலில் அன்னையை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

சரஸ்வதியை விக்ரகங்களில் படங்களில் ஆவாஹனம் செய்யலாம். நாம் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அவற்றின்மேல் சரஸ்வதி படத்தையோ விக்ரகத்தையோ வைத்து வழிபடுகிறோம். இன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை தாழம்பூ, ரோஜா, தாமரை ஆகிய மலர்கள் கொண்டு துதிக்கலாம்.

நவராத்திரி

நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன.

சரஸ்வதி தேவிக்கு வழிபாடு

இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரம்மனின் மனைவி

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. 

சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணை தட்சிணாமூர்த்தியிடம் இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

சரஸ்வதி தேவியின் அருள்

சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். ஞானம், அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி. அறிவும், ஞானமும் உறுதியானது. 

நம்முடனே வருவதும் அன்னத்தினை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியினை நாம் பார்க்கின்றோம். அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல் நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள்.

சரஸ்வதி பூஜை

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.

கூத்தனூர் சரஸ்வதி கோயில், வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பூஜை செய்ய ஏற்ற நாள்

பூஜையைத் தொடங்க முதலில் அன்னையை ஆவாஹனம் செய்ய வேண்டும். சரஸ்வதியை விக்ரகங்களில் படங்களில் ஆவாஹனம் செய்யலாம். 

சரஸ்வதிக்கு படையல்

சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து நூல்களை வைத்துவிட்டால் நான்குநாள்கள் கழித்து அவிட்ட நட்சத்திரத்தன்றுதான் எடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை நாளில்தான் நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டு மறுநாள் விஜயதசமி நாளில் எடுத்து படிக்கத் தொடங்குகின்றனர். சரஸ்வதி தேவியை தாழம்பூ, ரோஜா, தாமரை ஆகிய மலர்கள் கொண்டு துதிக்கலாம். பேரிச்சை, திராட்சை, நாவல் ஆகிய பழங்களையும் எலுமிச்சை சாதம், பால் சாதம், அக்கார வடிசல் ஆகிய நைவேத்தியங்களையும் சமர்ப்பிக்கலாம்.

பூஜை செய்ய உகந்த நேரம் :

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை புரட்டாசி 17ஆம் தேதி அக்டோபர் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. காலை 10.40 மணி முதல் 11.10 மணி வரை பிற்பகல் 12.10 மணி முதல் 01.10 மணி வரை பூஜை செய்யலாம். 

விஜயதசமி அக்டோபர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பூஜை செய்தவர்கள் மறு பூஜை செய்ய நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணி வரை மற்றும் காலை 09.10 மணி முதல் 10.10 மணிவரை நல்ல நேரம் உள்ளது. இந்த நேரத்தில் பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top