மாங்கல்ய பலம் அதிகரிக்கும் புரட்டாசி வெள்ளிக்கிழமை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாங்கல்ய பலம் அதிகரிக்கும் புரட்டாசி வெள்ளிக்கிழமை பற்றிய பதிவுகள் :

நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட புரட்டாசி வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். 

பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு புரட்டாசி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது.

துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் மட்டும்தான் துர்க்கை அம்மன் வழிபாட்டினை முறைப்படி செய்து வருகின்றோம். ஆனால் வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

கிரகங்களில் ராகு கேதுவினால் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமேயானால் புரட்டாசி வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு மிகச் சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோஷங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துர்க்கையம்மனை முறையாக வெள்ளி கிழமைகளிலும் வழிபடுதல் சிறப்பு.

புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள சிக்கல்கள் தீரும். வெள்ளிக்கிழமை என்றாலே சிறப்பு தான். ஏனென்றால் விரதமிருப்பது, பூஜை செய்வது, வழிபாடு செய்வது என அனைத்து விதமான தெய்வ காரியங்களுக்கும் வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

வீட்டில் இருக்கும் சிக்கல்கள் தீர புரட்டாசி வெள்ளிக்கிழமை அன்று காலை 5 மணியளவில் எழுந்து வீடு மற்றும் வாசலைச் சுத்தம் செய்துவிட்டு ஆறு மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் அம்மன் உருவப்படத்திற்குப் பூஜை செய்து மனதார வழிபட வேண்டும்.

தீப ஒளியில் அம்மனின் தங்களைப் பார்த்தால் நம் மனது ஒருநிலைப்பாடும். இதுபோல் தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் அம்மனை விரதம் ஏற்று வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் சிக்கல்கள் தீரும். அதேபோல் சுக்கிரன், முருகன்,மஹாலட்சுமி ஆகிறார்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top