சப்த முனீஸ்வரர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சப்த முனீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

உலகம் காக்கும் பொருட்டு, உலகில் நீதி வளம், மழை, தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, உலக மக்களை காக்க படைத்தாக புராணங்களில் குறிப்பிட்டுள்ளது.

சிவமுனி :

சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

மஹாமுனி :

அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார். வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் தங்கமுனி ஆவார்.

வாழமுனி :

வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி.

தவமுனி :

தேவர்கள், ரிஷிகள், யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

தருமமுனி :

தருமச் செயல்களை காத்து, தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி.

ஜடாமுனி :

வனங்களை காப்பவர், ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.

நாதமுனி :

தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி.

சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top