ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் முறை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் முறை பற்றிய பதிவுகள் :

இறைவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. அர்ச்சனை என்பது பக்தர்கள் அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும்.

பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர். இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர்.

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை. 

அதுவே நமது வேண்டுதல்கள் நிறைவேறிய சமயத்தில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top