தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில். இந்த தளத்தில் சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்குசவல்லி என்ற திருநாமத்துடனும் அருள் வாழ்த்து வருகின்றனர்.
வானுலக பசுவான காமதேனு வசிஷ்ட முனிவர்களால் சாபம் பெற்றது. அந்த பசு இந்த கோயிலுக்கு வந்து இறைவனை வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றது. அதன் காரணமாகவே இந்த ஊருக்கு ஆவூர் என்று பெயர் வந்தது.
இந்த கோயிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஒரே இடத்தில் ஐந்து பைரவர்கள் அருள் பாலித்து வருகின்றனர். இவர்களைத் தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்யும் பட்சத்தில் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
இதனை பஞ்ச பைரவ வழிபாடு எனக் கூறப்படுகிறது. மேலும் பிதுர்தோஷ நிவர்த்திக்கு இது ஒரு சிறந்த வழிபாடு ஆகும். இந்த பஞ்ச பைரவர்களை அவர்களை வழிபாடு செய்தால் பலன்கள் உடனடியாக கிடைக்கும்.
குறைவான வருமானம் கடன் சிக்கல்கள் வேலைவாய்ப்பின்மை திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.