தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நவமி திதி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நவமி திதி பற்றிய பதிவுகள் :

நவமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஆகும்.

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.

அமாவாசை நாளுக்கு அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.

இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கினால் வேலையில் அனைத்து காரியமும் சுபமாக நடைபெறும்.

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

 நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்பாலின நபர்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பை கண்டு அஞ்சாதவராக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். விருப்பம் போல வாழக்கூடியவர்கள். இது பொதுவான பலன்கள்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது :

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம்.

எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top