ஓரைகள் பற்றிய முழு விளக்கங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஓரைகள் பற்றிய முழு விளக்கங்கள் :

சுப ஓரைகளான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் என்ற நான்கில் அனைத்து சுபவிஷயங்களையும் செய்யலாம். மாங்கல்யம் செய்தல், பெறுதல், மாங்கல்யம் தருதல், பூணுதல், பூட்டல் போன்றவற்றை செய்யலாம். 

திருமணம், நிஷேகம், பும்சவனம் என்ற வளைகாப்பு, சீமந்தங்கள், சிசேரியன் ஆப்ரேஷன், குழந்தையை தொட்டிலில் இடுதல், ஜாதகரண நாமகரணங்கள் ஆகியன நடத்த நன்று.

மேலும் குலதெய்வ நேர்ச்சி முடிதருதல், காதுகுத்தல், கல்வி ஆரம்பம், உபநயனம், வாகனம் ஏறல், உழவு செய்தல், எருவிடல், விதை விதைத்தல், கதிர் அறுத்தல், தானியத்தை களஞ்சியம் சேர்த்தல், தானியங்களை செலவிடுதல், வீடு சமபந்தமான வேலைகளை ஆரம்பித்தல், கோவில் திருப்பணிகள் முதலியன செய்யலாம். சுப ஓரைகளான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் என்ற நான்கில் அனைத்து சுபவிஷயங்களையும் செய்யலாம்.

வாகன யோகம் தருகின்ற ஓரை எது?

வாகன யோகத்தை சுக்கிரனே தருகிறார். சனி வாகன அதிபதியாக உள்ளார். இவ்விரண்டு ஓரைகளும் வாகனயோகம் தருபவை ஆகும். 

மிக உயர்ந்த ஓரை எது?

குரு ஓரை மிக உயர்ந்ததாகும். அடுத்து சுக்கிர ஓரை உயர்ந்ததாகும். வளர்பிறை சந்திரன் அன்றைய திதிக்கு ஏற்ப நன்மைகள் செய்யும்.

அடுத்தடுத்து வரும் தீய ஓரைகள் எது?

சூரியனும், செவ்வாயும் அடுத்தடுத்து வரும் தீய ஓரைகள் ஆகும். இந்த அமைப்பு வருகின்ற காலங்களில் புதிய செயல்களை தொடங்கவோ அல்லது செய்யவோ கூடாது.

வாஸ்து பூஜை செய்ய நல்ல ஓரை தேவையா?

வாஸ்து புருஷன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எழுகிறான். எனவே வாஸ்து பூஜை செய்ய நல்ல ஓரை தேவையில்லை.

மிக மோசமான ஓரை எது?

சூரிய ஓரை மிக மோசமான ஓரை ஆகும். அடுத்து சனி ஓரையும், செவ்வாய் ஓரையும் கெடுதலை செய்யும் தன்மை உடையதாகும்.

அசுப ஓரையில் நடந்துவிட்ட சில செயல்களுக்கு பரிகாரம்:

ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி அவரது ஸ்லோகங்களை பாராயணம் செய்து வழிபட தோஷம் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top