வெற்றி தரும் வன்னி மரம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வெற்றி தரும் வன்னி மரம் பற்றிய பதிவுகள் :

வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள். இவற்றுள் வன்னிமரம் மிகவும் விசேஷமான ஒரு மரம். 

இந்த மரம் உள்ள இடத்தின் அருகில் இன்னொரு மரம் இயற்கையாய் தோன்றுவதும் இல்லை. பயிரிடுவதும் மிகவும் கடினம். வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். 

ஜெயதுர்கா கோயில் கொண்டிருக்கும் இடம் அது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தமது ஆயுதங்களை, வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. 

உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்கள் உண்டு.

விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில், வன்னிமரம் அக்னி சொரூபம் ஆகும். 

வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும். விஜயதசமியின்போது, துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னிமரத்தடியில் நடக்கும். 

வன்னி, வெற்றியைத் தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விசேஷம். வன்னிமரம் புகழ்பெற்ற சில சிவாலயங்களில் தலவிருட்சமாக இருக்கிறது. 

இந்த மரத்தை வணங்கி வழிபட்டால், பரீட்சையில், வழக்குகளில் வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம் என்பது நிச்சயம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top