மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுகிற ஒரு சடங்கு தாரா பூஜை.
தாரா அல்லது தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு. வட்ட வடிவம் கொண்ட செப்புப் பாத்திரத்தின் நடுவில் ஒரு சிறிய துவாரம் இருக்கும்.
அதன் வழியாக ஒரு தர்ப்பைப் புல்லை செருகி நீர், பால் அல்லது நெய்யை சீரான சிறு துளிகளாக இறைவனது தலையில் விழுமாறு வைத்திருப்பர்.
வட்டப் பாத்திரத்தை உயரமான ஒரு தாங்கலில் நிறுத்தியிருப்பர். இவ்வழிபாட்டிற்கு கிருத தாரை என்று பெயர். நெய் மூலம் தாரை நடத்தினால் அதற்கு வடமொழியில் கிருததாரை என்றும், பால் மூலம் தாரை நடத்தினால் ஷீரதாரை என்றும், தண்ணீர் மூலம் தாரை நடத்தினால் ஜலதாரை என்றும் பெயர்.
பன்னிரு சிவாலயங்களிலும் அன்றைய திருவிதாங்கூர் அரசர்களால் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது. அதற்குரிய நெய்யின் அளவு திருவிதாங்கூர் அறநிலையத்துறை அறிக்கையில் உள்ளது.
ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கிருததாரை நடைபெறும். பன்னிரண்டாவது வருடம் எல்லா சிவாலயங்களிலும் மொத்தமாக நடைபெறும் கிருததாரைக்கு கூட்ட கிருததாரை என்று பெயர்