ஜல தீபம் என்று அழைக்கப்படும் நந்தா விளக்கு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜல தீபம் என்று அழைக்கப்படும் நந்தா விளக்கு பற்றிய பதிவுகள் :

நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

ஜலம் என்றால் தண்ணீர் என்று பொருள்படும். ஜல தீபம் என்பது தண்ணிரை கொண்டு ஏற்றக் கூடிய ஒரு தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். 

ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும் போற்றப்படுகிறது. 

இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இப்பதிவில் இப்போது காணலாம்.

இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜல தீபத்தில் மறுபெயர் நந்தா விளக்கு. இது கருவறையில் ஏற்றும் விளக்கு. இதன் சிறப்பு என்னவென்றால் என்றும் அனையாமல் இருக்கும். 

இதன் அர்த்தம் என்னவென்றால் கடவுள் என்றும் நம்மை கண் விழித்து ஜோதியாக காத்துகொண்டிருக்கிறார். இந்த தீபத்தை கோயிலில் ஏற்றுவதால் எண்ணிய காரியம் நிரைவேறும்.

ஜல தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் :

✓ குழந்தை வரம்.
✓ பிறவி முக்தி.
✓ திருமணம் கைகூடும்.
✓ எண்ணிய காரியம் கைகூடும்.

இது நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

அந்த ஜோதியின் நிழல் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை. அத்தகைய நீரில் ஏற்றும் தீபமானது சிறப்பு வாய்ந்தது. 

மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும்.

எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். 

மனதில் நல்ல எண்ணங்கள் விதைத்து தன்னலம் கருதாமல் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். வளம் பெறுங்கள்.

ஜல தீபத்தின் முக்கியத்துவம் முன்னோர்களுக்கு தெரிந்ததால்தான் அந்த காலத்தில் நதிகளில் மற்றும் குலங்கலில் முக்கியமான நாட்கள் அன்று ஜலதீபத்தை ஏற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும் சில கோயில்கள் இந்த பழக்கம் மறக்காமல் கடைபிடிக்கப் படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top