ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பற்றிய பதிவுகள் :

உலகினைக் காக்கவும், உயிர்களுக்குத் திருவருள் செய்திடவும் திருவவதாரங்கள் பல எடுத்து, எண்ணிறந்தத் தலங்களில் அப்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

எம்பெருமான் நாராயணன் எடுத்த அவதாரங்களுள் பத்து அவதராங்கள் மிகவும் சிறப்பாதானதாகும். அவற்றுள் சிறப்பானது நரசிம்மவதாரமாகும்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருக்காட்சி நல்கிய லட்சுமி நரசிம்மர்.

நம்பியவர்களுக்கு நாராயணன், நம்பாதோருக்கு நரசிம்மன் என உண்மையான பக்திகொண்டு ஓழுகுவோர்க்கு இறைவன் திருவருள் சித்திக்கும் என்பதை உலகிற்கு உணர்த்தியது நரசிம்மாவதாரமாகும்.

எம்பெருமானின் இத்திருவவதாரமாகும் நிகழ்ந்த இடம் ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் எனும் தலமாகும்.

அப்பெருமாள் தேவர்களுக்காகவும் பிறுகு முனிவருக்காகவும் இலட்சுமி நரசிம்மராகத் திருக்காட்சி நல்கித் திருவருள் செய்த இடம் தமிழகத்திலுள்ள தட்சின அகோபிலம் எனும் ஆவணியாபுரம் திருத்தலமாகும்.

தட்சன சிம்மாசலம் என்றும் தட்சண சிம்மகிரி என்றும், பஞ்ச திருப்பதித் தலம் என்றும் சிறப்பிக்கப்படும். ஆவணி
என்பதற்கு சிங்கம் என்று பொருளாகும்.
இத்தலத்தில் திருமால் இலட்சுமி
நரசிம்மராக காட்சியளித்தமையாகும்.

திருமகளும், கருடனும் மற்றும் அப்பெருமாள் எழுந்தருளியுள்ள மலையும்கூட சிங்கமுகக் கோலத்தில் காட்சியளிப்பதாலும், இத்தலத்திற்கு இவணி நாராயணபுரம் என்று திருப்பெயர் வழங்கப்பட்டுத் தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகின்றது.

இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வெட்பாலை மரமாகும். இலட்சுமி நரசிம்மரின் திருவருள் வேண்டித் தேவர்கள் இம்மலையின்மீது வெட்பாலை மரங்களாக தோன்றினர்.

மிகவும் குளிர்ச்சி பொருந்தியதாக வெட்பாலை உள்ளதால் பௌர்ணமி நாளில் இம்மலையைச் சுற்றிக் கிரிவலம் வருவது, உடலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.

புராணக் காலத்தில் மிகவும் பாராக்கிரமமுடையவனும், அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஒர் அசுரன் இருந்தான்.

அவன் தனது கடுமையானத் தவங்களினால் நான்முகனை மகிழச்செய்து, தனக்குத் தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, வீட்டிலோ, வெளியிலோ, பகலிலோ,இரவிலோ, மரணம் ஏற்படக்கூடாது என்பது போன்ற அநேக வரங்களைப் பெற்றான்.

அதனால் அவன் மிகுந்த கர்வம் கொண்டு மூன்று உலகங்களையும் தேவர்களையும் அடிமைக்கொண்டு துன்புறுத்தினான்.

அவனுக்கு பயந்து இந்திரன் முதலான தேவர்கள் ஒடி ஓளிந்தனர். அவ்வசுரனுக்குப் பிரகரலாதன் என்று ஓரு குமாரன் இருந்தனன்.

தாயின் கருவிலிருக்கும் போதே, நாரத முனிவரிடம் அட்டாட்சர மந்திர உபதேசம் பெற்ற பிரகலாதன், நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான்.

அதனையறிந்த இரணியன், தனது மகனென்றும் பாராமல் பிரகலாதனை பலவகையிலும் துன்புறுத்தினான்.

ஆயுதத்தால் புடைத்தும், பாரங்களில் கட்டி சமுத்திரத்திலிட்டும், உயரத்திலிருந்துக் கீழே தள்ளியும், அக்கினியில் தள்ளியும், பாம்புகளை ஏவியும், உணவில் விஷம் கலந்தும் துன்புறுத்தினன்.

பிரகலாதன் அந்த துன்புறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் இருந்து தியானித்திருந்தனன். நாராயணன் திருவருளால் இரணியனின் கொடுமைகளிலிருந்துத் தப்பி பிழைத்தான்.

இறுதியாக இரணியன் மிகுந்த கோபத்துடன் தனது மகனை நோக்கி, உனது இறைவன் இந்தத் தூணிலும் இருப்பானோ? என்று ஓரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாய் சிரித்து, ஆந்தத் தூணை எட்டி உதைத்தான்.

உடனே ஸ்ரீமந் நாராயணன், தூணிலிருந்து நரசிம்மராகத் தோன்றினார். பின்னர் இரணியனைப் பாய்ந்துப் பிடித்தனர்.

அந்தி சாயும் வேளையில் வாசற்படியின் மீது அமர்ந்து, அவ்வசுரனை அழித்தனர்.

அப்போது நரசிம்ம சுவாமியின் திருவுருவத்தையும், கோபத்தையும் கண்டு அனைவரும் நடுங்கினர்.

பிரகலாதன் இரு கரங்கூப்பி வணங்கினன். ஈசுவரனே அமைதி கொண்டருளுங்கள் மாதவா மதுசூதனா அடியேங்கள்மீது கருணை செய்யுங்கள் தேவரீர், இலட்சுமி, தேவியோடு எழுந்தருள வேண்டும் என்று மண்டியிட்டு வேண்டினன்.

பிரகலாதனின் பக்திக்கு மெச்சிய நரசிம்மர், திருமகளைத் தனது இடப்பாகத்தில் அமர்த்திக்கொண்டு, சாந்தரூபமாய்த் திருக்காட்சி நல்கினர். பின்னர் பிரகலாதனுக்கு முடிசூட்டியருளித் தன் திருவுள்ளம் மகிழ்ந்தார்.

பிரகலாதனுக்கு திருவருள் செய்த நரசிம்மரைக் கண்டு தேவர்களும் பிருகு முனிவர் முதலானோரும் போற்றி வணங்கினர்.

ஸ்ரீதரனே, தேவரீரின் இத்திருக்கோலத்தை ஈரேழு உலகத்து உயிர்களுக்கும் காட்டியருளி, உலகங்களைத் காத்தருள வேண்டும் என்று வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலுக்கு மகிழ்ந்து நரசிம்மர், தேவர்களே நீங்கள் உத்தமமான ஓரு இடத்தில் தன்மைதரும் வெட்பாலை மரங்களாய் நின்று அருந்தவஞ் செய்து வாருங்கள், உங்களது வேண்டுதலுக்கு விரைவில் அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top