கிரக தோஷங்களின் பரிகாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கிரக தோஷங்களின் பரிகாரங்கள் பற்றிய பதிவுகள் :

மனிதராய் பிறந்தவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம். தோஷத்தின் அடிப்படையில் கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களைப் பற்றி பார்ப்போம்.

தோஷங்களும் பரிகாரங்களும் :

சூரியன் :

சூரியனால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கம், தாமிரம், சொர்ணம், கன்றுக்குட்டியும் பசுவும், கோதுமை, சிவப்பு பட்டு, சிவப்பு துணி இவைகளை தானம் செய்யலாம். செந்தாமரை பூவால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் நலன் பெறலாம்.

சந்திரன் :

சந்திரனால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி, முத்து, பால், சாமரம், சங்கு, வெண்பட்டு, வெள்ளை வஸ்திரம், பூணூல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம் ஆகியவைகளை தானம் செய்யலாம். துர்க்காதேவிக்கு கற்பூரம் ஏற்றி வெள்ளை அல்லி மலரால் பூஜை செய்தால் நன்மை உண்டாகும்.

செவ்வாய் :

செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காளை, துவரை, தாமிரம், பவளம், கோதுமை, சிவப்பு வஸ்திரம் ஆகியவைகளை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு தானம் செய்யலாம். சிவப்பு அரளி கொண்டு முருகப் பெருமானுக்கு பூஜை செய்தால் தோஷம் விலகும்.

புதன் :

புதன் கிரகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டு ஆடை, சர்க்கரை பொங்கல், தங்க விக்ரகம், சந்தன கட்டை, பச்சை பயிறு, யானை தந்தம், நெய் போன்றவைகளை தானம் செய்வது உத்தமமாகும்.

குரு :

குருவினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை, மஞ்சள், குதிரை, தங்க விக்ரகம், புஷ;பராகம், மஞ்சள் பட்டு வஸ்திரம், நவரத்தின மாலை, அவரை, கடலை, நவரத்தினம் ஆகியவைகளை தானம் செய்து வந்தால் குருவின் தோஷம் விலகும்.

சுக்கிரன் :

சுக்கிர கிரகத்தால் பாதிக்கபட்டவர்கள் வெண்பட்டு, வஜ்ரம், வெள்ளை குதிரை, வெள்ளி விக்ரகம், தாம்பூலம், அவரை, பசு ஆகியவைகளை தானம் செய்வது நலம் தரும்.

சனி :

சனி கிரக ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எள், பாத்திரம், நீலக்கம்பளி, கருப்பு பட்டு வஸ்திரம், இரும்பு விக்ரகம், கரும்பசு ஆகியவைகளை தானம் செய்தால் தோஷம் விலகி நன்மைகள் உண்டாகும். சனிக்கிழமைகளில் சாப்பிடுவதற்கு முன் குளித்துவிட்டு காக்கைக்கு சாதம் இட வேண்டும்.

ராகு :

ராகு கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெயுடன் பாத்திரம், கோமேதகம், எருமை, இரும்பு, பூதானம், குடை, உளுந்து ஆகியவைகளை தானம் செய்தால் தோஷம் விலகும்.

கேது :

கேது கிரகத்தினால் துன்பப்படுபவர்கள் வைடூரியம், விக்ரகம், வெண்கலப் பாத்திரம், பலவர்ண ஆடை, கம்பளி ஆகியவைகளை தானம் செய்தால் நன்மை தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top