ஜென்ம நட்சத்திரத்திற்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற வெற்றி நட்சத்திரங்கள் பற்றிய பதிவுகள் :

நல்ல ஆரம்பம் பாதி வேலையை முடிப்பதற்கு சமமாகும். ஒருவர் எந்தவொரு செயலை தொடங்கும் போதும், அதற்கு ஒரு நல்ல நேரம் பார்த்து தொடங்க வேண்டும். ஜோதிட ரீதியாக இதை தாரா பலன் என்று கூறுவது வழக்கம். 

ஒருவர் ஒரு செயலை செய்பவரின் நட்சத்திரத்திற்கும், அதை தொடங்குகிற நாளின் நட்சத்திரத்திற்கும் உள்ள பலனே தாரா பலன். ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற ஜென்ம நட்சத்திரத்தின்படி எந்தெந்த நட்சத்திர நாளில் புதிய முயற்சிகளை தொடங்குவதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும் என்று பார்ப்போம்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள் :

அஸ்வினி - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி.

பரணி - உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அஸ்வினி, மகம், மூலம்.

கார்த்திகை - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம்.

ரோகிணி - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

மிருகசீரிடம் - சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

திருவாதிரை - புனர்பூசம், விசாகம், ரேவதி, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை.

புனர்பூசம் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, சுவாதி.

பூசம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி.

ஆயில்யம் - அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

மகம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம்.

பூரம் - உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அஸ்வினி, மகம், மூலம்.

உத்திரம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

அஸ்தம் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

சித்திரை - சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.

சுவாதி - புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி.

விசாகம் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

அனுஷம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம், ரேவதி.

கேட்டை - அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

மூலம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி.

பூராடம் - உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அஸ்வினி, மகம், மூலம்.

உத்திராடம் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம்.

திருவோணம் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

அவிட்டம் - சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

சதயம் - புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.

பூரட்டாதி - பூசம், அனுஷம், உத்திரம், மகம், மூலம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சதயம்.

உத்திரட்டாதி - ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

ரேவதி - அஸ்வினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், உத்திரட்டாதி.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top