ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஐந்து விதமான தோஷங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஐந்து விதமான தோஷங்கள் பற்றிய பதிவுகள் :

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் ஐந்து விதமான தோஷங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் அடங்கி விடுகிறது.

ஐந்து விதமான தோஷங்கள் :

• வஞ்சித தோஷம்

• பந்த தோஷம்

• கல்பித தோஷம்

• வந்தூலக தோஷம்

• ப்ரணகால தோஷம்.


வஞ்சித தோஷம் :

பார்க்கக் கூடாத விஷயங்கள், வெறியூட்டும் சிந்தனைகள் போன்றவைகள் உடலை சூடாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இதன் மூலம் மனித உடலில் பல விதமான வியாதிகள் உண்டாகிறது. 

இவ்வாறு ஏற்படும் வியாதிகளே வஞ்சிததோஷம் ஆகும். உடன் பிறந்த சகோதரிகள் மற்றும் ஏழைப் பெண்களை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தானம் அளிப்பதன் மூலம் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

பந்த தோஷம் :

நம்முடன் பழகியவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது மற்றும் ஏதேனும் ஒரு செயல்களில் அவர்களை பழிவாங்கும் செயல்களை செய்வது போன்ற நிகழ்வு பந்த தோஷமாகும். 

இந்த தோஷமானது நிவர்த்தி அடைய தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்கு தான, தர்மங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம் இந்த பந்த தோஷமானது விலகும்.

கல்பித தோஷம் :

தன்னை விரும்பாதவர்களிடம் முறை தவறி நடந்து கொள்வது கல்பித தோஷமாகும். இந்த தோஷம் உள்ளவர்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்கு தன்னால் இயன்ற அளவு உதவிகளைச் செய்வதன் மூலம் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

வந்தூலக தோஷம் :

ஆணாக பிறந்த ஒருவர் தன்னை விட வயது அதிகமுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதன் மூலம் வந்தூலக தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷமுள்ளவர்கள் சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

இப்படிப்பட்ட தோஷம் விலக வயதான தம்பதிகள் மற்றும் ஏழை தம்பதிகளுக்கு தான, தர்மங்கள் மற்றும் வேஷ்டி, புடவை, துண்டு, ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை தலத்திற்குச் சென்று முருகனை தரிசிப்பதன் மூலம் வந்தூலக தோஷமானது நிவர்த்தியாகும்.

ப்ரணகால தோஷம் :

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யும் போது, பொருத்தம் பார்க்காமல் பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதன் காரணமாக வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை ஏற்படும். 

இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்வதன் மூலம் ப்ரணகால தோஷமானது நிவர்த்தியாகும்.

இதுவே மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏற்படும் ஐந்து தோஷங்களும், அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களும் ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top