ஒருவரின் ரேகையை வைத்து ஜெனன ஜாதகத்தை அறிய முடிவது போல, ஜெனன ஜாதகத்தை வைத்து ரேகையை அறிய முடியாது. ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகையை ஆராய்வதன் மூலமாக அவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்ல முடியும்.
கங்கண ரேகை :
கங்கண ரேகை என்பது உள்ளங்கையின் கீழ்ப்புறம் உள்ள மணிக்கட்டில் இருந்து ஆரம்பிக்கக்கூடியது. கங்கண ரேகையின் அமைப்பைக் கொண்டு ஒருவரது உடலின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அறியலாம்.
கங்கண ரேகை ஒன்றுக்கு மேற்பட்டதாக அல்லது அதிகமாக இருந்தால் அவர்கள் அதிகம் ஆயுள் உடையவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
இச்சா ரேகை :
இச்சா ரேகை என்பது புதன் மேட்டை நோக்கி செல்லக்கூடிய ஓர் ரேகையாகும். இந்த ரேகை அனைவரின் கைகளிலும் இருக்காது.
பாச ரேகை :
பாச ரேகை என்பது உள்ளங்கையின் மத்தியில் காணப்படக்கூடிய சின்ன சின்ன துண்டு ரேகைகள் ஆகும். இந்த ரேகையை செல்வாக்கு ரேகை என்று கூறுவார்கள். இந்த ரேகை இங்குதான் ஆரம்பிக்கும்,
இங்குதான் முடியும் என்று சொல்ல முடியாது.
இந்த ரேகை கைகளில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம். இந்த ரேகை எப்போது வேண்டுமானாலும் மறையக்கூடும்.
சுக்கிர வளையம் :
சுக்கிர வளையம், ஆள்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் மத்தியில் உண்டாகி சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் முடிவடையும். இருதய ரேகைக்கு மேலே அரை வட்டம் போல் இது காணப்படும். சுக்கிர வளையம் எல்லோருடைய கைகளிலும் அமைந்திருப்பதில்லை.
குரு வளையம் :
குரு வளையம், ஆள்காட்டி விரலின் அடிப்பாகத்தில் குரு மேட்டை ஒட்டிக்கொண்டு ஆரம்பமாகும். ஒருவர் கையில் குரு வளையம் இருந்தால் நீதி, நேர்மை உடையவர்களாக இருப்பார்கள்.
சனி வளையம் :
சனி வளையம், நடுவிரலுக்கு அடியில் சனிமேட்டை வளைத்து கொண்டிருக்கக்கூடிய ஒரு பகுதியாகும். சனி வளையம் பெரும்பாலும் அனைவரின் கைகளிலும் இருக்காது. மேலும், கையில் சனி வளையம் அமைந்தால் அது தீய பலன்களை தரவல்லது. ஆகவே, கைகளில் சனி வளையம் இல்லாமல் இருப்பது நன்மையே.